News April 21, 2025
தேசிய போட்டிக்கு கரூர் வீரர் தேர்வு

கரூர் வீரர் சீனியர் பிரிவிலான தேசிய டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டிக்கு தேர்வு. எதிர் வரும் தேசிய அளவிலான டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டிக்கு சீனியர் பிரிவில் தமிழக அணி சார்பாக விளையாட கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த M.பிரசாந்த் என்ற வீரர் தேர்வாகியுள்ளார். இவருக்கு கரூர் மாவட்ட டென்னிஸ் பந்து கிரிக்கெட் சங்க செயலாளர் Dr.ராஜேந்திரன் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Similar News
News October 30, 2025
கடவூர் அருகே வீடு புகுந்து 13 பவுன் நகை திருட்டு!

கடவூர் தாலுகா மாவத்தூர் அடுத்த சின்னாம்பட்டியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (60). கறிக்கடை வியாபாரியான இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று விட்டு மீண்டும் வந்து பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து மோதிரம், தங்க காசு, செயின் உள்ளிட்ட 13 பவுன் தங்க நகைகள், வெள்ளி நகைகள் திருடு போனது தெரியவந்தது. பழனிச்சாமி அளித்த புகாரின் பேரில் பாலவிடுதி போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.
News October 30, 2025
கரூர் கலெக்டர் அறிவிப்பு!

கரூர் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை காலத்தில் தென்னை மரங்களை பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தகவல் அளித்துள்ளார். இதில் அதிவேக புயல் எச்சரிக்கை விடுக்கப்படும் காலங்களில், புயலுக்கு முன் தேங்காய் இளநீரை அறுவடை செய்தல் மூலம் மரத்தின் பாரத்தை குறைத்து மரங்கள் வேரோடு விழுவதைத் தவிர்க்கலாம். மரத்தை சுற்றியும் மண்களைப் போட்டு பலப்படுத்தலாம் என கலெக்டர் தெரிவித்தார்.
News October 30, 2025
கரூரில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் உதவித்தொகை!

கரூரில் வாழும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், கலை இலக்கிய மேம்பாட்டுச் சங்கம் மூலம் ஆதிதிராவிடர், மற்றும் பழங்குடியினர் எழுத்தாளர்களுக்கு, 2024-2025 ஆம் ஆண்டிற்கு உதவித்தொகை, வழங்க விண்ணப்பங்கள் https://www.tn.gov.in/form_view.php?dep_id=MQ== இந்த இனிய தளத்தில், பதிவு செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அறிவித்துள்ளார்.


