News April 21, 2025
பழனியில் கஞ்சா விற்பனை செய்த 6 வாலிபர்கள் கைது!

பழனி நகர் காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் காவலர்கள் தீவிர ரோந்து & கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பின்புறம் கஞ்சா விற்பனை செய்த கார்த்திக்ராஜா(25), சிவக்குமார்(23), மாரிசாமி(21), அருண்குமார்(37), ஜேம்ஸ்(27), நாகேந்திரன்(27) ஆகிய 6 பேரை கைது செய்து அவர்கள் இடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து பழனி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
Similar News
News August 22, 2025
திண்டுக்கல்லில் ரூ.5,000 வேண்டுமா..?

திண்டுக்கல் மக்களே.., நமது இல்லத்தரசிகள் சொந்தத் தொழில் தொடஙுவதற்கு உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் இயந்திரங்கள் வாங்க 50 % அதாவது ரூ.5,000 மானியமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்திற்கு கீழ் உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு விருப்பமுள்ளவர்கள் உரிய ஆவணங்களுடன் மாவட்ட அலுவலகத்தை நேரடியாக அணுகலாம். இந்த சூப்பர் திட்டம் குறித்த தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News August 22, 2025
திண்டுக்கல்: ‘வாட்ஸ் ஆப்’மூலம் ரூ.8 லட்சம் அபேஸ்!

திண்டுக்கல்: சாணார்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சுலைமான் சேட்(52. வியாபாரியான இவரது எண்ணிற்கு சில நாட்களுக்கு முன் குறுந்தகவலில் ’இணையதளம் மூலம் வர்த்தகம் செய்தால் அதிக வருமானம் பெறலாம்!’ எனக் கூறி அவரை குழுவில் இணைத்து, சுமார் ரூ.8 லட்சம் வரை வாங்கி ஏமாற்றியுள்ளனர். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுபோன்ற நபர்கள் உங்களை அணுகினால் உடனே 1930 என்ற எண்ணை அழைக்கவும்.
News August 22, 2025
திண்டுக்கல்: மாரத்தான் ஆட்சியர் அறிவிப்பு

திண்டுக்கல் 12-வது புத்தகத் திருவிழாவை முன்னிட்டு வாருங்கள் ஓடுவோம், வாசிப்பை நோக்கி என்ற குறிக்கோளுடன் 23-ம் தேதி காலை 06.00 மணிக்கு டட்லி பள்ளி மைதானத்திலிருந்து அங்குவிலாஸ் பள்ளி மைதானம் வரை “விழிப்புணர்வு மாரத்தான்” நடத்தப்படவுள்ளது. இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணாக்கர்கள், பொதுமக்கள் பங்கேற்கலாம் என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.