News April 21, 2025
ஏரியில் குளிக்கச் சென்றன் மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம்

திருப்பத்தூரை சேர்ந்த ஆர்யா (12) என்ற மாணவர் பெங்களூருவில் 6ஆம் வகுப்பு படித்து வந்தார். விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்த அவர், நண்பர்களுடன் பெரியவெங்காயப்பள்ளி பகுதியில் உள்ள ஏரியில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது ஏரியில் குளித்துக் கொண்டிருந்த ஆர்யா, திடீரென தண்ணீரில் மூழ்கினார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Similar News
News January 13, 2026
திருப்பத்தூர்: எல்லை பாதுகாப்பு படையில் வேலை.. 69K Salary!

திருப்பத்தூர் மக்களே.. எல்லை பாதுகாப்பு படையில் 549 கான்ஸ்டபிள் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10ஆம் வகுப்பு மற்றும் ஏதேனும் விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற்றிருக்க வேண்டும். மேலும், மாத சம்பளமாக ரூ.21,700 – 69,100 வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் <
News January 13, 2026
மனம் திருந்தியவர்களுக்கு ரூ.50,000

திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (ஜன-.2) மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் 2025-2026 ஆம் ஆண்டின் மறுவாழ்வு நிதியின் கீழ் கள்ளச்சாராயம் காய்ச்சி மனம் திருந்திய 17 நபர்களுக்கு தலா
ரூ. 50,000 வழங்கப்பட்டது. இதற்கான ரூ. 8,50,000 தொகைக்கான ஆணையை ஆட்சியர் சிவசௌந்திரவள்ளி வழங்கினார். இதில் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
News January 13, 2026
திருப்பத்தூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

திருப்பத்தூர் பழைய பேருந்து நிலையத்தில் வருகிற ஜனவரி 15 மற்றும் 16 ஆகிய இரண்டு நாட்களில் பொங்கல் விழா நடைபெற உள்ளது. மேலும் இதில் மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை பரதநாட்டியம் போன்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக ஆட்சியர் சிவசௌந்திரவள்ளி நேற்று (ஜன.12) அறிவித்தார். பொதுமக்கள் இதில் கலந்து கொள்ளுமாறு அறிவிப்பு வெளியாகி உள்ளது.


