News April 21, 2025
திருவாரூர் அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

திருத்துறைப்பூண்டி அருகே மடத்துப்புரத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் நேற்றுமுன்தினம் வீட்டைப் பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் வைத்திருந்த 8 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரில் திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Similar News
News September 17, 2025
திருவாரூர்: ஆதார் கார்டு தொலைந்து விட்டதா ?

இந்தியாவில் மிக முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு விளங்குகிறது. அப்படிப்பட்ட ஆதார் கார்டு தொலைந்து விட்டால் கவலை வேண்டாம். <
News September 17, 2025
திருவாரூரில் கல்வி கடன் முகாம்

திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்தியன் ஓவர்சிஸ் இணைந்து நடத்திய மாபெரும் கல்வி கடன் முகாமில் 383 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.4 கோடியே 99 லட்சம் மதிப்பில் கல்வி கடனுக்கான வங்கி வரைவோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வ.மோகனச்சந்திரன் வழங்கினார். இந்நிகழ்வில் ஏராளமான மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
News September 17, 2025
திருவாரூர்: பெரியார் சிலைக்கு மரியாதை செய்த எம்.எல்.ஏ

தந்தை பெரியார் 147-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக குழு உறுப்பினர் க.மாரிமுத்து எம்எல்ஏ பெரியரின் சிலைக்கு மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தினார், இந்நிகழ்வில் முத்துப்பேட்டை சிபிஐ ஒன்றிய செயலாளர் எம்.உமேஷ்பாபு உடன் இருந்தார். மேலும் கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.