News April 21, 2025
3 நாள்கள் விடுமுறைக்கு பிறகு கூடும் சட்டப்பேரவை!

3 நாள்கள் விடுமுறைக்கு பிறகு சட்டப்பேரவை இன்று கூடுகிறது. காலை 9:30 மணிக்கு பேரவைக் கூடியதும் கேள்வி நேரம் நடைபெறவுள்ளது. அதன்பிறகு மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக் கோரிக்கைகள் மீது நடைபெறும் விவாதங்களுக்கு அத்துறையின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார்.
Similar News
News January 13, 2026
இந்த கண்டிஷன்கள் இருக்கா.. பொண்ணே கிடைக்காது!

Superblog.ai என்ற நிறுவனத்தின் CEO சாய் கிருஷ்ணா ஒரு Matchmaking தளம் மூலம் பெண் தேட, அந்த நிறுவனத்தின் CEO-வை அணுகியுள்ளார். பெண்ணுக்கு மது & புகை பழக்கம் இருக்க கூடாது, Vegeterian-ஆக இருக்கணும் என்ற 3 கண்டிஷன்களையும் அவர் சொல்ல, இப்படிபட்ட பெண்ணே கிடைக்க மாட்டார் என Matchmaking தரப்பினர் கூறியுள்ளனர். இதுகுறித்து அவர் பதிவிட, நெட்டிசன்கள் அதிர்ந்து போயுள்ளனர். நீங்க என்ன சொல்றீங்க?
News January 13, 2026
அதிமுகவுடன் கூட்டணி.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிமுக தலைமையிலான NDA கூட்டணியில் தமமுக தொடர்வதாக அக்கட்சியின் தலைவர் ஜான் பாண்டியன் அறிவித்துள்ளார். ராமதாஸ், ஜான் பாண்டியனுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியிருந்தார். இந்நிலையில், திமுக உடனான கூட்டணி பேச்சை மறுத்துள்ள ஜான் பாண்டியன், ஜன.23-ல் நடைபெறும் NDA கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க இருப்பதாகவும், 5 தொகுதிகள் வரை கேட்கவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
News January 13, 2026
CBI விசாரணையில் நடந்தது என்ன?

விஜய்யிடம் CBI என்ன விசாரித்தது என்பது குறித்த தகவல்களை வெளியே சொல்வது மாண்பாக இருக்காது என நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். ஆனால், கரூர் சம்பவத்தில் பல முரண்பாடுகள் இருப்பதாக கூறிய அவர், 607 காவலர்கள் களத்தில் இருந்தார்கள் என்று CM-ம், 500 காவலர்கள் இருந்தார்கள் என DGP டேவிட்சனும் மாற்றி மாற்றி சொன்னதாக கூறியுள்ளார். மேலும், இச்சம்பவத்தில் என்ன நடந்தது என்று மக்களுக்கு தெரியும் என்றார்.


