News April 21, 2025
தனியார் பஸ்-வேன் மோதல்; வேன் டிரைவர் பலி

மதுரையில் இருந்து தேனிக்கு தனியார் பஸ் சென்றது. நேற்று மதியம் ஆண்டிப்பட்டி அருகே SSபுரம் சென்றபோது சிமென்ட் மூடைகள் ஏற்றி வந்த சரக்கு வேன் மீது பஸ் மோதியது. இதில் வேனின் முன் பகுதி நொறுங்கி பஸ்சின் அடிப் பகுதியில் சிக்கியது.இடிபாடுகளுக்குள் சிக்கிய வேன் டிரைவர் ஆண்டிபட்டி சீனிவாசா நகரை சேர்ந்த முத்துலிங்கம் 45, சம்பவ இடத்திலேயே பலியானார்.10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Similar News
News November 1, 2025
ஆட்சியர் தலைமையில் வாக்காளர் பட்டியல் திருத்த பயிற்சி

போடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் தலைமையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர், வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு இன்று பயிற்சி வழங்கப்பட்டது. இதில் அந்தந்த தொகுதிகளில் அலுவலர்கள் வாக்காளர் பட்டியல் திருத்த பணியை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
News November 1, 2025
மருத்துவ முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்

கூடலூர் நகரம் என்.எஸ்.கே., பொன்னையா கவுண்டர் மேல்நிலைப்பள்ளியில் நவ.01 இன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற்றது. நடைபெற்ற முதல்வர் மருத்துவ முகாமில் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்தார். வருவாய் அலுவலர் ராஜகுமார், உத்தமபாளையம் கோட்டாட்சியர் மு.செய்யது முகமது உடனிருந்தனர்.
News November 1, 2025
தேனி: கோயிலில் வேலை., ரூ.58,600 வரை சம்பளம்!

தேனி மக்களே, இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள 31 இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்த மற்றும் 10th முடித்த 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் நவ.25க்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.10,000 – 58,600 வரை வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு <


