News April 21, 2025
ஏப்ரல் 21: வரலாற்றில் இன்று!

▶ தேசிய குடிமை பணிகள் தினம். ▶ 1926 – மறைந்த இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் பிறந்த நாள். ▶ 1964 – புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் நினைவு நாள். ▶ நாடக, திரைப்பட நடிகர் டி.ஆர். மகாலிங்கம் நினைவு நாள். ▶ 1944 – பிரான்சில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்த நாள். ▶ 1987 – இலங்கை தலைநகர் கொழும்புவில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவத்தில் 106 பேர் உயிரிழப்பு.
Similar News
News September 15, 2025
சிறந்த வீரருக்கான விருதை வென்றார் சிராஜ்

ஆகஸ்ட் மாதத்திற்கான ஐசிசி விருதை இந்தியாவின் முகமது சிராஜ் வென்றுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில், முகமது சிராஜின் ஆக்ரோஷமான பந்துவீச்சில் இந்தியா தொடரை டிரா செய்ய முடிந்தது. சிறந்த வீரராக அவர் தேர்வாக இதுவே முக்கிய காரணம். அதேபோல் மகளிரில் அயர்லாந்தின் ஓர்லா ப்ரெண்டர்காஸ்ட் விருதை பெற்றுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் ஆல்ரவுண்டராக ஓர்லா அசத்தியிருந்தார்.
News September 15, 2025
இஸ்லாமியர்களின் உரிமை பாதுகாக்கப்பட்டது: ஸ்டாலின்

வக்ஃபு வாரிய சட்டத்தில் செய்துள்ள திருத்தங்களை நீக்கும் ஒரு முக்கிய நகர்வாக <<17714489>>உச்சநீதிமன்ற உத்தரவு <<>>அமைந்துள்ளதாக CM ஸ்டாலின் தெரிவித்தார். இந்த சட்டத்திருத்த முன்வரைவு அறிமுகப்படுத்தப்பட்ட போதே, திமுக இதனை எதிர்த்ததாகவும் குறிப்பிட்டார். இன்றைய உத்தரவு இஸ்லாமியர்களின் மத உரிமைகளை SC பாதுகாக்கும் என மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை வலுப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளதாக CM கூறினார்.
News September 15, 2025
இடது கையில் Watch கட்டுவது ஏன் தெரியுமா?

யாரும் சொல்லிக்கொடுக்கவில்லை என்றாலும் தானாகவே வாட்ச்சை இடது கையில் கட்டும் பழக்கம் எப்படி வந்தது தெரியுமா? பெருவாரியான மக்கள் Right Handers என்பதால், அன்றாட வேலைகளை செய்யும்போது இடையூறு ஏற்படாமல் இருக்க Watch-ஐ இடது கையில் கட்டுகின்றனர். இதனால் வாட்ச் சேதமாவதிலிருந்தும் பாதுகாக்கப்படுகிறது. இவர்களுக்காக தான் வாட்ச்களின் பொத்தான்களை பெரும்பாலான கம்பெனிகள் வலது பக்கத்தில் வைக்கிறதாம்.