News April 21, 2025

பள்ளிகளில் ஜாதி சின்னங்கள்.. அரசுத் தடை

image

பள்ளி வளாகங்களில் மாணவர்களின் ஜாதியை வெளிப்படுத்தும் வகையிலான சின்னங்களை பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது. அனைத்து மாவட்ட தலைமைக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. ஜாதி அடையாளங்களை வைத்து மாணவர்கள் அடிக்கடி மோதுவதாகவும், ஆதலால் ஜாதிய பாடல்களை ஒளிபரப்பவோ, ஜாதியைக் குறிக்கும் வகையிலான ஆடைகளை அணியவோ அனுமதிக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

Similar News

News November 15, 2025

வெளியே செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது: சஞ்சு

image

RR-க்கு தான் என்றும் கடமைப்பட்டுள்ளதாக சஞ்சு சாம்சன் உருக்கமாக தெரிவித்துள்ளார். CSK-வுக்கு மாற்றப்பட்ட நிலையில், RR குடும்பத்தில் இருந்து வெளியே செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டதாக கூறியுள்ளார். ராஜஸ்தான் அணிக்காக தன்னால் முடிந்த அனைத்தையும் கொடுத்துவிட்டேன் என்ற அவர், அணியில் சில உறவுகளையும் பெற்றுள்ளதாக நெகிழ்ந்துள்ளார். சஞ்சுவின் CSK வருகை பற்றி நீங்க என்ன நினைக்குறீங்க?

News November 15, 2025

பாஜகவில் இருந்து Ex மத்திய அமைச்சர் இடைநீக்கம்

image

பிஹார் தேர்தலில் இமாலய வெற்றி பெற்ற பாஜக இன்று அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன்படி பிஹாரை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கட்சிக்கு எதிராக செயல்பட்டதால் அவர் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளதாக தலைமை தெரிவித்துள்ளது. அதேபோல் அக்கட்சியின் MLC அசோக் அகர்வாலும் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

News November 15, 2025

பிக்பாஸ்: வாட்டர் மெலன் திவாகர் வெளியேறினார்

image

சர்ச்சைகளுக்கு மத்தியில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸில் கடந்த வாரம் பிரவீனும், துஷாரும் வெளியேற்றப்பட்டனர். அதேபோல் இந்த வாரமும் டபுள் எவிக்‌ஷன் இருக்கலாம் என கூறப்படுகிறது. அதன்படி டைட்டில் வின்னராவர் என பலரால் எதிர்பார்க்கப்பட்ட கனி பிக்பாஸில் இருந்து வெளியேறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ரெட் கார்டு மூலம் ‘வாட்டர் மெலன் ஸ்டார்’ திவாகர் வெளியேற்றப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

error: Content is protected !!