News April 21, 2025
காதல் சுகுமார் தலைமறைவு.. வலைவீசி தேடும் போலீஸ்

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் காதல் சுகுமார் மீது துணை நடிகை ஒருவர் மோசடி புகார் அளித்திருந்தார். திருமணம் செய்து கொள்வதாக கூறி பணம், நகைகளை பெற்று ஏமாற்றி விட்டதாகவும் கூறியிருந்தார். புகாரை விசாரித்த மாம்பலம் மகளிர் போலீசார் 3 பிரிவுகளில் சுகுமார் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் காதல் சுகுமாரன் தலை மறைவாக, போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
Similar News
News January 12, 2026
BREAKING: ஜன நாயகன் புதிய அப்டேட்

‘ஜன நாயகன்’ படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்க கோரி, படக்குழு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. வழக்கு தற்போது பட்டியலிடப்பட்டுள்ள நிலையில், விசாரணை நாளை நடைபெறலாம் என கூறப்படுகிறது. வழக்கை முடித்த கையோடு விரைவில் படத்தை ரிலீஸ் செய்ய KVN நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் படத்திற்கு ஆதரவான முடிவு வருமா? என்பதில் நிச்சயமற்ற நிலையே உள்ளது.
News January 12, 2026
கமலின் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த தடை

கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களை வர்த்தக ரீதியில் பயன்படுத்த இடைக்கால தடை விதித்து சென்னை HC உத்தரவிட்டுள்ளது. ‘நீயே விடை’ என்ற நிறுவனம் அனுமதியின்றி தனது புகைப்படம், பெயர், பிரபல வசனத்தை பயன்படுத்தி, டி-சர்ட்கள், சர்ட்களை விற்பனை செய்வதை சுட்டிக்காட்டி அவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த உரிமையியல் வழக்கை விசாரித்த சென்னை HC, தடை உத்தரவை பிறப்பித்து, வழக்கை பிப்ரவரி மாதம் ஒத்திவைத்தது.
News January 12, 2026
அதிமுக கூட்டணியில் புதிய கட்சி.. எதிர்பாராத அறிவிப்பு

அதிமுக கூட்டணியில் இணைய மேலும் சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக EPS கூறியுள்ளார். அதிமுக வேட்பாளர் நேர்காணலின்போது பேசிய அவர், இன்னும் ஓரிரு நாள்களில் புதிய கட்சி அதிமுக கூட்டணிக்கு வரவுள்ளதாகவும் அறிவித்துள்ளார். மேலும், அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் எனவும் பேசியுள்ளார். முன்னதாக, அதிமுக கூட்டணியில் அமமுக, தேமுதிக இணையலாம் என தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.


