News April 20, 2025
தங்கம் விலை குறையுமா?

ஓராண்டில், ஒரு சவரன் தங்கத்தின் விலை ₹20,000 உயர்ந்திருப்பதால், மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். சிலர் தங்கத்தின் விலை குறையும் என்று காத்திருக்கின்றனர். ஆனால், தங்கத்தின் விலை எப்போது எப்படி நகரும் என்பதை கணிக்க முடியாது என்கிறார் பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன். விரைவில், ஒரு கிராம் தங்கம் ₹10,000க்கும் போகலாம் அல்லது குறையவும் செய்யலாம். சிறுக சிறுக தங்கத்தை வாங்குவதே சிறந்த முதலீடாக இருக்கும்
Similar News
News January 11, 2026
கனமழை.. 7 மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு அலர்ட்

தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நாளை கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. இதனால் நாளை 7 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், குடை, ரெயின் கோட்டை மாணவர்கள் மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள்.
News January 11, 2026
‘ஆட்சியில் பங்கு’ மவுனமாக சென்ற செல்வபெருந்தகை

‘ஆட்சியில் பங்கு’ என மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட காங்., நிர்வாகிகள் தொடர்ந்து பேசி வருகின்றனர். இதற்கு ‘ஆட்சியில் பங்கு’ கிடையாது என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருப்பதாக அமைச்சர் <<18826821>>ஐ.பெரியசாமி<<>> பதிலடி கொடுத்தார். இந்நிலையில், கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசுபவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த செல்வபெருந்தகை, ஐ.பெரியசாமிக்கு கருத்து குறித்து பதிலளிக்காமல் சென்றார்.
News January 11, 2026
நிர்வாக தோல்வியை மறைக்கும் திமுக அரசு: அண்ணாமலை

அமைதி வழியில் போராடும் இடைநிலை ஆசியர்களை தினந்தோறும் கைது செய்து, திமுக அரசு தனது சர்வாதிகார முகத்தை காட்டுவதாக அண்ணாமலை சாடியுள்ளார். தனது X பதிவில் அவர், சம வேலைக்கு சம ஊதியம் வழங்கும் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத CM ஸ்டாலின், நிர்வாக தோல்வியை மறைக்க ஆசியர்கள் மீது போலீஸை ஏவுவதாக விமர்சித்துள்ளார். ஏற்கெனவே, கைதான ஆசிரியர் சங்கத்தின் 7 நிர்வாகிகளை விடுவிக்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


