News April 20, 2025
இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்(20.4.2025 ) இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 13, 2025
விலாசம் கேட்பது போல் நடித்து பெண்ணிடம் தாலிச் செயின் பறிப்பு

கொங்கராயபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சங்கமித்திரை தனது விவசாய நிலத்தில் மாட்டு சாணம் அள்ளிக்கொண்டிருந்தார். அப்போது, விலாசம் கேட்பது போல் நடித்து அவரிடம் இருந்து 7 சவரன் தாலிச் சங்கிலியை 17 வயது மதிக்கத்தக்க இளைஞர் பறித்துக்கொண்டு ஓடிவிட்டார். இச்சம்பவம் குறித்து வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளியைத் தேடி வருகின்றனர்.
News August 12, 2025
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆறு அரசு பள்ளிகள் மூடல்

தமிழகம் முழுவதும் மாணவர் சேர்க்கை குறைவால், ஒரு மாணவர் கூட இல்லாத 207 அரசுப் பள்ளிகள் மூடப்பட உள்ளன. இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மட்டும் ஆறு பள்ளிகள் மூடப்பட இருப்பதாகப் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்தக் அறிவிப்பால் கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு 32 பள்ளிகள் கள்ளக்குறிச்சியில் மூடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
News August 12, 2025
கள்ளக்குறிச்சியில் 6,194 பேர் நாய் கடியால் பாதிப்பு

கள்ளக்குறிச்சியில் கடந்த சில மாதங்களாக குழந்தைகள், பெரியவர்களை நாய்கள் கடிக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஜனவரி – ஜூன் வரை கள்ளக்குறிச்சியில் 6,194 பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. நல்வாய்ப்பாக உயிரிழப்பு இல்லை. உங்கள் பகுதியில் நாய் தொல்லை இருந்தால் உடனே கள்ளக்குறிச்சி நகராட்சி அல்லது மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளிக்கலாம். SHARE IT