News April 20, 2025

திருப்பூர்: வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ்!

image

சோமனூர் ரகங்களுக்கு 15 சதவீதமும், பல்லடம், அவினாசி ரகங்களுக்கு 10 சதவீதம் என்று கூலி உயர்வு நிர்ணயம். பல்லடம் பகுதியில் ஜவுளி உற்பத்தியாளர்கள் நாளை இதற்கான ஒப்பந்தத்தை பெற்றுக் கொள்கிறார்கள் என்ற உத்தரவாதத்துடன் உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறுகிறோம். நாளை சங்கத்தின் பொதுக்குழு கூட்டி, 2 நாட்களில் விசைத்தறிகளை இயக்குவோம் என உற்பத்தியாளர்கள் தகவல்.

Similar News

News August 12, 2025

திருப்பூரில் அடுத்தடுத்து கொலை சம்பவங்கள்!

image

திருப்பூரில் கடந்த சில மாதங்களில் வரதட்சணை கொடுமையில் ரிதன்யா தற்கொலை மற்றும் அதன் தாக்கம் குறையும் முன் ப்ரீத்தி என்ற மற்றுமொரு பெண்ணும் தற்கொலை செய்து கொண்டார். மேலும் மக்களை காக்கும் காவலர் சண்முகவேல் கொலை , வழக்கறிஞர் முருகானந்தம் கொலை, தனிமையில் இருக்கும் முதியவர்களை தாக்குதல் என தொடர்ந்து நடைபெறும் சம்பவங்கள் திருப்பூர் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.

News August 12, 2025

திருப்பூர்: FREE இலவச தையல் இயந்திரம் வேண்டுமா ?

image

திருப்பூர் மக்களே சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதமாக இலவச தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் தங்கள் அருகிலுள்ள இ-சேவை மையம் மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களை <>இங்கே கிளிக் <<>>செய்து மாவட்ட இணையதளம் வாயிலாக அறியலாம். உதவும் உள்ளம் கொண்ட திருப்பூர் மக்களே SHARE பண்ணுங்க!

News August 12, 2025

திருப்பூர் மக்களே: உடனே புகார் அளிக்கலாம்!

image

திருப்பூர் மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. இதை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!