News April 20, 2025

டிரம்பை எதிர்க்கும் இந்திய, சீன மாணவர்கள்

image

அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை மற்றும் குடியேற்ற அதிகாரிகளுக்கு எதிராக 3 இந்திய மாணவர்கள், 2 சீன மாணவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். சர்வதேச மாணவர்களுக்கான F-1 மாணவர் அந்தஸ்தை அரசு சட்டவிரோதமாக ரத்து செய்வதால் தங்கள் கல்வி பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக மாணவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். டிரம்ப் அதிபராக பதவியேற்றது முதல், அந்நாட்டில் குடியேற்ற சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன.

Similar News

News December 28, 2025

திமுகவுடன் கூட்டணியா? டிடிவி தினகரன் விளக்கம்

image

EPS தலைமையை ஏற்க மாட்டோம் என திட்டவட்டமாக டிடிவி தினகரன் தெரிவித்துவிட்டார். இதனால் அவர் திமுக பக்கம் செல்ல வாய்ப்புள்ளதாக ஒருசில அரசியல் நோக்கர்கள் கூறிவந்தனர். இந்நிலையில் உங்கள் பார்வை திமுக பக்கம் திரும்புமா என டிடிவி தினகரனிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு எவ்வித மறுப்பும் தெரிவிக்காத டிடிவி, பொறுத்திருந்து பாருங்கள் என புன்னகையுடன் பதில் அளித்துள்ளார்.

News December 28, 2025

BREAKING: விஜய் கீழே விழுந்தார்… பதற்றம் உருவானது

image

மலேசியாவில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்த விஜய்க்கு ஏர்போர்ட்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதேசமயம் அவரை காண ஏராளமான ரசிகர்கள் குவிந்ததால் விஜய் கூட்டத்தில் சிக்கி திணறினார். பாதுகாவலர்கள் அவரை காரின் அருகே அழைத்து சென்றபோது கட்டுக்கடங்காத கூட்டத்தால் விஜய் தடுமாறி கீழே விழுந்தார். உடனடியாக விஜய் காரில் ஏறி அங்கிருந்து புறப்பட்டு சென்றாலும் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

News December 28, 2025

BREAKING: இந்திய அணி 221 ரன்கள் குவிப்பு

image

இலங்கைக்கு எதிரான 4-வது டி20-ல் அதிரடியாக விளையாடிய இந்திய மகளிர் அணி ரன்களை 221 குவித்துள்ளது. தொடக்க வீராங்கனைகளான ஸ்மிருதியும், ஷபாலியும் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி இலங்கைக்கு நெருக்கடி கொடுத்தனர். ஸ்மிருதி 48 பந்துகளில் 80 ரன்களையும், ஷபாலி 46 பந்துகளில் 79 ரன்களையும் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

error: Content is protected !!