News April 20, 2025

DANGER: அதிக நேரம் ரீல்ஸ் பார்ப்பவரா நீங்கள்?

image

அதிக நேரம் ரீல்ஸ் பார்ப்பதால், நிரந்தர பார்வை இழப்பு அபாயம் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் ரிப்போர்ட் வெளியிட்டுள்ளனர். பார்வை குறைபாடு அதிகரித்து வருவதாகவும், குறிப்பாக 0-16 வயது உடையவர்களே அதிகம் பாதிக்கப்படுவதாகவும் அறிக்கையில் தெரியவந்துள்ளது. 2050-க்குள் உலகம் முழுவதும் 50% பேருக்கு MYOPIA குறைபாடு ஏற்படும் எனவும், இது நிரந்தர பார்வை இழப்பிற்கு வழிவகுக்கும் எனவும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

Similar News

News January 24, 2026

மகளிர் உரிமைத் தொகை உயர்வு.. மகிழ்ச்சி செய்தி

image

CM ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியின் கடைசி சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று பள்ளிக் கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்தும் திருத்தச் சட்ட மசோதா, பிச்சை எடுப்பதை தடுத்தல் உள்ளிட்ட 5 மசோதாக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன், மகளிர் உரிமைத் தொகை உயர்வு பற்றிய அறிவிப்பும் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.

News January 24, 2026

நீட் தேர்வுக்காக காலை வெட்டிக்கொண்ட நபர்

image

UP-ல், மருத்துவப் படிப்பில் சேர்வதற்காக சூரஜ் பாஸ்கர் என்பவர் விபரீத செயலில் ஈடுபட்டுள்ளார். தனது காலை அவரே வெட்டிக்கொண்டு, ரவுடிகள் தாக்கியது போல் நாடகமாடியுள்ளார். எப்படியாவது நீட் தேர்வில் மாற்றுத்திறனாளிகள் கோட்டாவில் பாஸாகி விடலாம் என்ற எண்ணத்தில் அவர் காலை வெட்டியது போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவரை ஹாஸ்பிடலில் போலீசார் சேர்த்தனர்.

News January 24, 2026

PM மோடி மீது பாஜக தலைவர்கள் அதிருப்தி?

image

BJP தேசிய தலைவராக நிதின் நபின் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், அக்கட்சியின் மூத்த தலைவர்கள் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு அரசியலில் அனுபவமே இல்லை; கட்சிக்காக உழைத்த திறனுள்ள தலைவர்களை பரிசீலித்திருக்கலாம் என பேச்சு எழுந்துள்ளதாம். என்ன உழைத்தாலும் பலனில்லை என நம்பிக்கை இழந்துள்ள மூத்த தலைவர்கள், நிதின் நபினை தேர்வு செய்தது PM மோடி என்பதால் மெளனம் காக்கிறார்களாம்.

error: Content is protected !!