News April 20, 2025
அரியலூரில் பயிற்சி முகாம்; கலெக்டர் அறிவிப்பு

அரியலூரில் 2025 ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் 21 நாட்கள் அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் வரும் ஏப்.25 முதல் மே.25 வரை நடைபெறுகிறது. இதில், அரியலூர் மாவட்டத்தை சார்ந்த 18 வயதிற்கு உட்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் மாணவர் அல்லாதவர் கலந்து கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் பொ. இரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
Similar News
News December 5, 2025
அரியலூர்: நலம் காக்கும் மருத்துவ முகாம்

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் தாலுகா வாரியங்காவல் அரசு மேல்நிலைப்பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நாளை (டிச.06) நடைபெறுகிறது. மேலும் இந்த மருத்துவ முகாமில் எக்கோ கார்டியோகிராம், நடமாடும் எக்ஸ்ரே வாகனம், ரத்த பரிசோதனை செய்யப்படுகிறது. எனவே பொதுமக்கள் மற்றும் அமைப்புசாரா தொழில் நலவாரிய பணியாளர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
News December 5, 2025
அரியலூர்: BE போதும் அரசு வேலை ரெடி!

இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் (HCL) காலியாக உள்ள Junior Manager பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 64
3. வயது: 18-40 (SC/ST-45,OBC-43)
4. மாதச்சம்பளம்: ரூ.30,000 – ரூ.1,20,000
5. கல்வித் தகுதி: Diploma, Degree, B.E/B.Tech, LLB
6.கடைசி தேதி: 17.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க
News December 5, 2025
அரியலூர்: ஆளுநருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

தமிழக ஆளுநர் ரவி, தமிழர்கள் குறித்து கூறிய கருத்தை கண்டித்து அரியலூர் மாவட்ட திராவிடர் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் அண்ணாசிலை அருகே நடந்த போராட்டத்துக்கு விடுதலை நீலமேகன் தலைமை வகித்தார். சுபா.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினர். இந்நிகழ்வி திமுக, மதிமுக, விசிக, காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு ஆளுநரின் பேச்சைத் தீவிரமாக எதிர்த்தனர்.


