News April 20, 2025

IPL: CSK அணி பேட்டிங்

image

சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. நடப்பு சீசனின் முதல் பாதியில் மும்பை – சென்னை அணிகளுக்கு சிறப்பாக அமையவில்லை. 7 போட்டிகளில் மும்பை 3 வெற்றிகளையும், சென்னை 2 வெற்றிகளையும் மட்டுமே பெற்றுள்ளன. இதனால் இரு அணிகளுக்குமே இது வாழ்வா? சாவா? ஆட்டம். யார் ஜெயிக்க போறா? உங்க கணிப்பு என்ன?

Similar News

News October 17, 2025

PoK உருவாவதற்கு நேருவே காரணம்: ஜிதேந்திர சிங்

image

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) உருவாவதற்கு வழிவகுத்த போர் நிறுத்தத்திற்கு நேருவே காரணம் என்று அமைச்சர் ஜிதேந்திர சிங் குற்றஞ்சாட்டியுள்ளார். அப்போதைய உள்துறை அமைச்சராக இருந்த வல்லபாய் படேலுக்கு சுதந்திரமாக முடிவெடுக்கும் உரிமையை அளித்திருந்தால், பாக்., – காஷ்மீர் பிரச்னையே எழுந்திருக்காது என்றும் தெரிவித்துள்ளார். இதனால் இந்தியாவின் வரலாறே மாறியிருக்கும் என்றும் கூறினார்.

News October 17, 2025

சுகரை கட்டுக்குள் வைக்கும் அற்புத பானம்!

image

சுகரை கட்டுக்குள் வைக்க மருந்துகள் அவசியம் என்றாலும், உணவின் மூலமாகவும் அதனை நீங்கள் சரி செய்யலாம். இதற்கு சிம்பிளான ஒரு பானம் இருக்கிறது. ➤ஒரு பாகற்காய்யை சிறிய துண்டுகளாக வெட்டவும் ➤அதை அரை கப் தண்ணீரில் ஊறவைத்து, ஒரு சிட்டிகை உப்பு (அ) எலுமிச்சை சாறுடன் கலந்துகொள்ளுங்கள் ➤தினமும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். பலர் பலனடையட்டும் SHARE.

News October 17, 2025

OPS-ன் அடுத்த திட்டம் என்ன?

image

அடுத்த 6 மாதங்களில் தேர்தல் வரவுள்ள நிலையில், OPS என்ன செய்யப்போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது அதிமுக MLA-வாக இருக்கும் அவருக்கு 2026 தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை EPS வழங்க மாட்டார். 2024 தேர்தலில் சுயேட்சையாக களமிறங்கி தோல்வியை தழுவியதால், மீண்டும் அதை செய்ய விரும்பவில்லையாம். இதனால், தேர்தல் அரசியலை விட்டு விலகப்போகிறாரா (அ) புதிய கட்சியை தொடங்க போகிறாரா என்ற பேச்சு எழுந்துள்ளது.

error: Content is protected !!