News April 20, 2025
வெற்றியை நோக்கி RCB

RCB அணிக்கு முதல் ஓவரிலேயே விக்கெட் விழுந்தாலும் விராட் – படிக்கல் ஜோடி ஆட்டத்தின் போக்கை மாற்றியது. இருவரும் நிதானமாக ஆடினாலும் தேவைப்படும் நேரங்களில் பவுண்டரிகளையும் விளாசினார். 31 பந்துகளில் தேவ்தத் படிக்கல் அரை சதம் அடித்தார். 12 ஓவர்கள் முடிவில் RCB 108/1 என வலுவான நிலையில் உள்ளது. எளிய இலக்கு என்பதால் RCB வெற்றி வெகு தூரத்தில் இல்லை.
Similar News
News December 29, 2025
அதிக கடனில் தமிழகம்.. புயலை கிளப்பிய காங். நிர்வாகி

இந்தியாவிலேயே TN தான் அதிக நிலுவைக்கடன் வைத்துள்ளது என காங்., நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி கூறியுள்ளார். கடனில் இருந்த TN-ஐ வளர்ச்சியடைந்த மாநிலமாக திமுக மாற்றியதாக கனிமொழி கூறியிருந்தார். அதை X-ல் சுட்டிக்காட்டி, 2010-ல் உபி., தமிழகத்தை விட இருமடங்கு கடன் வைத்திருந்ததாகவும், ஆனால் தற்போது உபி.,-ஐ விட TN அதிக கடனில் உள்ளதாக தெரிவித்துள்ளார். இது மிகவும் கவலைக்குரிய விஷயம் என குறிப்பிட்டுள்ளார்.
News December 29, 2025
பும்ரா, பாண்ட்யாவுக்கு ரெஸ்ட்? பிசிசிஐ முடிவு

நியூசிலாந்து ODI தொடருக்கான இந்திய அணி ஜன.3 அல்லது 4-ம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. இந்நிலையில் ODI தொடரில் பும்ரா, ஹர்திக் பாண்ட்யாவுக்கு ரெஸ்ட் கொடுக்க BCCI திட்டமிட்டுள்ளது. பிப்ரவரியில் டி20 WC தொடங்கும் நிலையில், பணிச்சுமை கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனினும் இருவரும் NZ எதிரான டி-20 தொடரில் விளையாடவுள்ளனர். மேலும், பாண்ட்யா VHT தொடரின் சில போட்டிகளில் களமிறங்குவார் என கூறப்படுகிறது.
News December 29, 2025
புத்தாண்டில் வரிசை கட்டும் கார்கள் இவைதான்!

புத்தாண்டை முன்னிட்டு, 2026 ஜனவரியில் முன்னணி கார் நிறுவனங்கள் தங்களது புது மாடல்கள் மற்றும் அப்டேட்டட் வேரியண்ட்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளன. அடுத்த தலைமுறை பெட்ரோல் SUV-கள் முதல் எலக்ட்ரிக் கார்கள் வரை, பல மாடல்கள் விற்பனைக்கு வரிசை கட்டியுள்ளன. அந்த கார் மாடல்களின் போட்டோக்களை மேலே தொகுத்துள்ளோம். அதை Swipe செய்து பாருங்க.


