News April 20, 2025
மூன்றரை மாதங்களில் 1 சவரன் தங்கம் ₹14,360 அதிகரிப்பு

கடந்த ஜன. 1-ம் தேதி 1 கிராம் தங்கம் ₹7,150 ஆகும். அதேபோல், 1 சவரன் தங்கம் ₹57,200 ஆகும். இந்த விலை கடந்த மூன்றரை மாதங்களில் கிடுகிடுவென அதிகரித்து வந்தது. அதன்படி இன்று 1 கிராம் ₹8,945ஆகவும், 1 சவரன் தங்கம் ₹71,560ஆகவும் விற்கப்படுகிறது. அதாவது 1 கிராம் தங்கம் விலை ₹1,795 அதிகரித்துள்ளது. அதேபோல், 1 சவரன் தங்கம் ₹14,360 உயர்ந்துள்ளது. வரும் நாள்களில் மேலும் உயரும் எனக் கூறப்படுகிறது.
Similar News
News September 10, 2025
பாஜகவில் இணைகிறாரா செங்கோட்டையன்? அறிக்கை

துணை ஜனாதிபதியான CP ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவித்து செங்கோட்டையன் வெளியிட்டுள்ள அறிக்கையில் எந்த இடத்திலும் அதிமுக என குறிப்பிடவில்லை. மேலும், மோடி உலக தலைவர்களில் முதன்மையானவர், அமித்ஷா இரும்பு மனிதர் என புகழ்ந்துள்ளார். EPS உடனான மோதலுக்கு பிறகு அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்களை சந்தித்து பேசிய செங்கோட்டையன், அக்கட்சியில் இணைகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. நீங்க என்ன நினைக்கிறீங்க?
News September 10, 2025
ITI போதும்! மத்திய அரசில் 440 காலியிடங்கள்!

மத்திய அரசின் பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 440 Operator-களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ITI முடித்த 18- 29 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். எழுத்து தேர்வின் அடிப்படையில் தேர்ச்சி நடைபெறும். வரும் 12-ம் தேதி வரை மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். தேர்ச்சி பெறுவோருக்கு மாத சம்பளமாக ₹16,900 வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு <
News September 10, 2025
ராணுவ ஆட்சி என்றால் என்ன?

நேபாளத்தில் தற்போது ராணுவ ஆட்சி அமலுக்கு வந்துள்ளது. ராணுவ ஆட்சி என்றால் என்ன தெரியுமா? நாட்டில் அரசியல் குழப்பம், உள்நாட்டு போர் போன்ற சூழல்களில் நிலைமை கைமீறிப் போனால், ராணுவம் ஆட்சியை கைப்பற்றும் நிலையே ராணுவ ஆட்சியாகும். சட்டம், நீதி, நிர்வாகம் அனைத்துமே ராணுவ கட்டுப்பாட்டில் இருக்கும். ராணுவ ஆட்சி, சர்வாதிகார ஆட்சியாக மாறும் ஆபத்து இதில் உண்டு. இந்தியாவில் இப்படி ஏற்படாது. ஏன் தெரியுமா?