News April 20, 2025
கோர்ட்டுக்கே மிரட்டல்.. பாஜக MP-க்களுக்கு வலுக்கும் எதிர்ப்பு

SC-ஐ அவமதித்து பேசியதாக பாஜக MP-க்கள் <<16157597>>நிஷிகாந்த் துபே<<>>, தினேஷ் ஷர்மாவை எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடி வருகின்றன. கோர்ட்டை மிரட்டிவரும் தங்கள் கட்சி MP-க்களை பிரதமர் மோடி தடுத்து நிறுத்த வேண்டும் என அசாதுதீன் ஓவைசி கேட்டுக்கொண்டுள்ளார். அதேபோல் SC-ஐ பலவீனப்படுத்த மத்திய அரசு முயற்சிப்பதாக காங். குற்றஞ்சாட்டியுள்ளது. ஆனால், இது பாஜக MP-க்களின் சொந்த கருத்து என நட்டா கூறியிருந்தார்.
Similar News
News October 26, 2025
சற்றுமுன்: விஜய்க்கு மீண்டும் நெருக்கடி

கரூர் துயரத்தால் ஏற்பட்ட நெருக்கடியால், தவெகவின் செயல்பாடுகள் தேக்கமடைந்துள்ளன. இதுகுறித்த வழக்குகளை சிபிஐக்கு மாற்றியபோது, ‘நீதி வெல்லும்’ என பதிவிட்டு விஜய் ஆதரவு தெரிவித்திருந்தார். இந்நிலையில், இவ்வழக்கில் புஸ்ஸி ஆனந்த், CTR நிர்மல்குமார் உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்குப்பதிந்துள்ளது. மேலும், அவர்களை தனித்தனியே விசாரிக்கவும் திட்டமிட்டிருப்பது விஜய்க்கு மீண்டும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
News October 26, 2025
புதிய ரேஷன் கார்டு.. இந்த தவறை செய்யாதீர்

ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் பெரும்பாலும் அண்மையில் திருமணம் செய்தவர்களே. அவர்கள் செய்யும் தவறு, முந்தைய ரேஷன் கார்டுகளில் இருக்கும் பெயரை நீக்குவதில்லை. கணவன், மனைவி இருவரும் தங்களது பெற்றோரின் ரேஷன் கார்டில் இருந்து தங்களது பெயர்களை நீக்கிய பிறகு விண்ணப்பிக்க வேண்டும். அதேபோல், சரியான முகவரியை கொடுக்க வேண்டும். இல்லையெனில், அதிகாரிகளின் விசாரணையில் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். SHARE IT
News October 26, 2025
வழுக்கை விழுந்த இடத்தில் முடி வளர அருமையான TIPS

ஆண்களே, முடி உதிர்வு அதிகமாக இருப்பதால் இளம்வயதிலேயே வழுக்கை விழுகிறதா? கவலைய விடுங்க. அதனை இயற்கையான முறையிலேயே சரி செய்யலாம். கற்றாழை ஜெல்லையும், ஆமணக்கு எண்ணெயையும் கலந்து முடியின் வேர்களில் தடவுங்கள். அரை மணி நேரம் ஊறவைத்த பின் தலைக்கு குளியுங்கள். வாரத்திற்கு 2 முறை இதனை செய்து வந்தால், வழுக்கையிலும் முடி வளரும். பலரது பிரச்னைக்கு தீர்வாக இருக்கும் SHARE.


