News April 20, 2025
கல்லீரல் பரிசோதனை இலவசம்: தமிழக அரசு

தூக்கமின்மை, சரியான உணவின்மை, உடற்பயிற்சி இல்லாதது ஆகியவற்றால் கல்லீரல் பிரச்னை பலருக்கும் ஏற்படுகிறது. இந்நிலையில், உலக கல்லீரல் தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை இயக்குநரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கல்லீரல் செயல்பாடு குறித்த பரிசோதனையை இலவசமாக செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.
Similar News
News April 21, 2025
ஏப்ரல் 21: வரலாற்றில் இன்று!

▶ தேசிய குடிமை பணிகள் தினம். ▶ 1926 – மறைந்த இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் பிறந்த நாள். ▶ 1964 – புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் நினைவு நாள். ▶ நாடக, திரைப்பட நடிகர் டி.ஆர். மகாலிங்கம் நினைவு நாள். ▶ 1944 – பிரான்சில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்த நாள். ▶ 1987 – இலங்கை தலைநகர் கொழும்புவில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவத்தில் 106 பேர் உயிரிழப்பு.
News April 21, 2025
‘குட் பேட் அக்லி’ OTT ரிலீஸ் எப்போது?

அஜித் நடிப்பில் வெளியாகிய குட் பேட் அக்லி படம் வசூலில் சக்கைப்போடு போட்டு வருகிறது. உலகளவில் இப்படம் சுமார் 250 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், படத்தின் OTT ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மே இரண்டாம் வாரத்தில் படத்தை OTT-ல் வெளியிட திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News April 21, 2025
பார்சிலோனா ஓபன்.. பட்டம் வென்றார் டென்மார்க் வீரர்!

பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடரில் டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ரூனே சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். ஃபைனலில் ஸ்பெயின் வீரர் அல்காரஸை அவர் எதிர்கொண்டார். பரபரப்பாக நடைபெற ஆட்டத்தில், 7-6, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வென்று ஹோல்ஜர் ரூனே வாகை சூடினார். 2 முறை சாம்பியன் பட்டம் வென்ற அல்காரஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளார்.