News April 20, 2025

கட்சியில் இருந்து நீக்கி விடுங்கள்: மல்லை சத்யா

image

இன்று நடைபெற்ற மதிமுக நிர்வாகக்குழு கூட்டத்தில், துரை வைகோ – மல்லை சத்யா இடையேயான மோதல் பூதாகரமானது. துரை வைகோவுக்கு 40 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு தெரிவித்திருக்கும் நிலையில், தன்னை கட்சியில் இருந்து நீக்கிவிடுமாறு மல்லை சத்யா கோரிக்கை வைத்துள்ளார். கடைசி வரை வைகோவின் தொண்டனாக இருந்துவிட்டு போகிறேன் என்று கட்சியின் துணை பொதுச்செயலாளரான அவர் பேசினார்.

Similar News

News December 30, 2025

பொருளாதார நிபுணர்களுடன் PM மோடி ஆலோசனை

image

2026-27-ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை பிப்.1-ம் தேதி, FM நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பட்ஜெட் தொடர்பாக, நாட்டின் முன்னணி பொருளாதார நிபுணர்கள் மற்றும் துறை சார்ந்த வல்லுநர்களுடன் PM மோடி ஆலோசனை மேற்கொண்டார். இக்கூட்டத்தில் நிர்மலா சீதாராமன், நிதிஆயோக் துணைத்தலைவர் சுமன் பெரி, நிதி ஆயோக் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News December 30, 2025

பொங்கல் பரிசுத் தொகுப்பு.. புதிய சர்ச்சை வெடித்தது

image

பொங்கல் என்பது இந்துக்கள் பண்டிகை. எனவே, பொங்கல் கொண்டாடுபவர்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என அர்ஜுன் சம்பத் சர்ச்சையை கிளப்பியுள்ளார். தமிழக அரசியல் களத்தில் கிறிஸ்துவ ஓட்டை யார் வாங்குவது என்பதில் மு.க.ஸ்டாலினுக்கும், ஜோசப் விஜய்க்கும் போட்டி நடைபெற்று வருவதாகவும், ஸ்டாலின், உதயநிதி, விஜய் மூவரும் கிறிஸ்துவ சபையை வளைக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர் என அவர் கூறியுள்ளார்.

News December 30, 2025

ரயில் பயணிகளுக்கு நற்செய்தி!

image

65 எக்ஸ்பிரஸ், மெயில் ரயில்களின் வேகம் வரும் ஜன.1 முதல் அதிகரிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன்மூலம் பல வழித்தடங்களில் பயணிகளுக்கு 5 முதல் 85 நிமிடங்கள் வரை பயண நேரம் மிச்சமாகும். முன்னதாக மணிக்கு 80/90 கிமீ வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில் அவற்றின் வேகம் 110 கிமீ-ஆக உயர்கிறது. இதற்கு தென் மாவட்டங்களில் அமைக்கப்பட்ட இரட்டை வழித்தடம் முக்கிய காரணமாக கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!