News April 20, 2025
நாயகன் சூரிக்கு குவியும் பாராட்டு.. நெகிழ்ச்சியில் பதிவு

காமெடியனாக வலம் வந்த சூரி தற்போது கதாநாயகனாக கலக்கி வருகிறார். அவரது நடிப்பில் ‘மாமன்’ படம் மே 16-ம் தேதி திரைக்கு வருகிறது. இதனிடையே அவரது அடுத்த படமான மண்டாடியின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் சூரி நன்றி தெரிவித்து X-ல் பதிவிட்டுள்ளார். அதில் விருப்பத்தை வெற்றிக்குச் சேர்க்கும் பாலம், முயற்சி மற்றும் அர்ப்பணிப்பு என சூரி குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News December 26, 2025
இட்லி தட்டில் ஒட்டாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

இட்லி சுடும்போது இருக்கும் ஒரு பெரிய பிரச்னை, தட்டிலேயே ஒட்டிக்கொள்வது. தட்டில் எண்ணெய் தேய்த்து மாவை ஊற்றினாலும் ஒட்டிக்கொள்ளும். இதை தவிர்க்க சூப்பர் டிப்ஸ் இதோ! கின்னத்தில் 2 ஸ்பூன் நெய், 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளுங்கள். இட்லி மாவை ஊற்றும் முன்பு இந்த கலவையை தட்டில் அப்ளை செய்து, 2 நிமிடங்கள் கழித்து, பின்னர் மாவை ஊற்றுங்கள். இப்படி செய்தால் இட்லி பஞ்சுபோல ஒட்டாமல் வரும்!
News December 26, 2025
ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு அறிவிப்பு

அனைத்து AAY, PHH வகை ரேஷன் அட்டைதாரர்களும் டிச.31-க்குள் கை விரல் ரேகை பதிவு செய்ய மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனையொட்டி, தமிழகம் முழுவதும் அதற்கான பணிகளை மேற்கொள்ள கலெக்டர்கள் அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர். அருகிலுள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று உடனே கைவிரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும். வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் பணி இருப்பவர்கள் ரேஷன் கார்டு நகலுடன் அருகிலுள்ள ரேஷன் கடைக்கு செல்லவும்.
News December 26, 2025
நடிகை மீனாவின் மகள் PHOTO

தமிழ் சினிமாவில் மீனாவுக்கு என்று ரசிகர்கள் பட்டாளம் இன்றும் இருக்கிறது. இப்போது கிறிஸ்துமஸையொட்டி மீனா தனது மகளுடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்த நிலையில், நைனிக்காவுக்கு பெரிய ரசிகர் வட்டாரம் உருவாகியுள்ளது. ‘தெறி’ படத்தில் வந்த விஜய்யின் சுட்டிக் குழந்தையா இது என பலரும் ஆச்சரியப்பட்டுள்ளனர். மேலும், அவருக்கு ஹீரோயினாகும் அத்தனை அம்சங்களும் இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.


