News April 20, 2025

விஜய் ஓரவஞ்சனையா? சலசலக்கும் நெட்டிசன்கள்

image

தவெக தலைவர் விஜய், தனது X பதிவில் போட்டிருக்கும் வாழ்த்து சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ் புத்தாண்டு தினமான ஏப்.14 அன்று வெறுமனே சித்திரைத் திருநாள் வாழ்த்துகள் என பதிவிட்டிருந்தார். ஆனால், ஈஸ்டர் திருநாளுக்கு உவகையுடன் அனைவருக்கும் வாழ்த்துகள் என அலங்கார புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். தமிழ் புத்தாண்டு என நேரடியாக விஜயால் வாழ்த்து கூற முடியாதா என நெட்டிசன்கள் மனம் குமுறி வருகின்றனர்.

Similar News

News November 6, 2025

BREAKING: கட்சி பதவி பறிப்பு.. ஸ்டாலின் அதிரடி

image

சென்னையில் திமுக நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் ஒன் டூ ஒன் சந்திப்பு நடத்தி வருகிறார். அப்போது, 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கட்டாயம் வெற்றிபெற்றே ஆகவேண்டும். தோல்வி அடைந்தால், மாவட்ட செயலாளர்கள் உட்பட அனைவரது பதவிகளும் பறிக்கப்படும் என்று நெல்லை உள்ளிட்ட மாவட்டச் செயலாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், தேர்தல் பணியை தீவிரப்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளார்.

News November 6, 2025

அனைத்து கட்சி கூட்டத்திற்கு CM ஏன் வரவில்லை? ஜெயக்குமார்

image

கரூர் கூட்ட நெரிசல் எதிரொலியாக, கட்சி கூட்டங்களுக்கு நெறிமுறைகள் வகுப்பது தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின் பேட்டியளித்த ஜெயக்குமார், கூட்டத்திற்கு CM, DCM ஏன் வரவில்லை என்று கேள்வி எழுப்பினார். அதிமுக ஆட்சியில் விருப்பு, வெறுப்பின்றி பிற கட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதாக கூறிய அவர், திமுக ஆட்சியில் நீதிமன்றத்தை நாட வேண்டியுள்ளதாக குறிப்பிட்டார்.

News November 6, 2025

சற்றுமுன்: KGF நடிகர் காலமானார்

image

பிரபல கன்னட நடிகர் ஹரிஷ் ராய் சற்றுமுன் காலமானார். கே.ஜி.எஃப்-ல் காசிம் சாச்சா என்ற கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமானார் ஹரிஷ் ராய். அதன்பின், அவரை ‘சாச்சா’ என்று ரசிகர்கள் அன்புடன் அழைத்து வந்தனர். இந்நிலையில், புற்று நோயால் பாதிக்கப்பட்டு, ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவரது உயிர் பிரிந்துள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகத்தினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!