News April 20, 2025
அமித் ஷாவின் ஹெல்த் டிப்ஸ்.. இதை மட்டும் ஃபாலோ பண்ணா!

உலக கல்லீரல் தினத்தை முன்னிட்டு மத்திய அமைச்சர் அமித் ஷா, சில ஹெல்த் டிப்ஸ்களை வழங்கியுள்ளார். தினமும் 2 மணி நேரம் உடற்பயிற்சி, 6 மணி நேர தூக்கத்தை கடைபிடைத்தால் உடல் ஆரோக்யமாக இருக்கும் எனவும், கடந்த 4 ஆண்டுகளாக இதை ஃபாலோ செய்து உடல் எடை, சர்க்கரை நோயில் இருந்து மீண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வயதிலும் எந்த மாத்திரைகளையும் எடுத்து கொள்வதில்லை எனவும் கூறியுள்ளார்.
Similar News
News January 12, 2026
2026-ன் முதல் மெகா சம்பவம்.. சீறும் PSLV!

2026-ம் ஆண்டின் முதல் விண்வெளி ஏவுதல் இன்று நடைபெற உள்ளது. PSLV-C62 ராக்கெட் மூலம் இன்று 16 செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட உள்ளன. இதில், ‘EOS-N1 Anvesha’ எனப்படும் DRDO-ல் உருவாக்கப்பட்ட செயற்கைக்கோள், இந்தியாவின் கண்காணிப்பு பணிகளுக்காக பயன்படுத்தப்பட உள்ளது. இது தவிர பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 15 வணிக செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட உள்ளன.
News January 12, 2026
காலம் காலமாக போராட வேண்டிய அவலம்: OPS

தமிழக அரசின் வருவாய் துறையில் பணிபுரியும் கிராம உதவியாளர்களுக்கு உடனடியாக காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும் என OPS வலியுறுத்தியுள்ளார். காலமுறை ஊதியத்திற்காக காலம் காலமாக போராட வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளதாகவும், அதிக வேலைப்பளு, குறைந்த ஊதியம் என்ற ரீதியில் கிராம உதவியாளர்களின் பணி இருந்து வருவது மிகுந்த வேதனை அளிக்கும் செயல் என்றும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
News January 12, 2026
ஈரானில் இந்தியர்கள் கைதா?

<<18832349>>ஈரானில்<<>> அரசுக்கு எதிரான போராட்டம் வலுத்து வருவதால், அங்கு பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில், அங்கு கலவரத்தில் ஈடுபட்டதாக 6 இந்தியர்கள் கைது செய்யப்பட்டதாக வீடியோ ஒன்று வைரலானது. இந்த செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என இந்தியாவிற்கான ஈரான் தூதர் முகமது ஃபதலி மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், ஈரான் நிலைமை குறித்த உடனடி தகவல்களுக்கு நம்பகமான செய்தி நிறுவனங்களை அணுகவும் அறிவுறுத்தியுள்ளார்.


