News April 20, 2025
காசிமேட்டில் கணிசமாக உயர்ந்த மீன் விலை

மீன்பிடித் தடைக்காலம் அமலில் உள்ளதால் சென்னை காசிமேடு மீன் மார்க்கெட்டில் மீன்கள் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. ₹800க்கு விற்கப்பட்ட வஞ்சிரம் மீன் ₹1,000க்கு விற்கப்படுகிறது. அதே போல் ஒரு கிலோ சங்கரா மீன் விலை ₹350ல் இருந்து ₹400 ஆகவும், சீலா மீன் கிலோ ₹600ல் இருந்து ₹700க்கும் விற்கப்படுகிறது. மீன் வரத்து குறைந்து வருவதால், அடுத்து வரும் நாட்களில் மேலும் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News August 23, 2025
அமெரிக்காவுக்கு அஞ்சல் சேவையை நிறுத்தும் இந்தியா!

புதிய வரிவிதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 25-ம் தேதி முதல் USA-க்கு தபால் சேவைகளை நிறுத்துவதாக அஞ்சல்துறை அறிவித்துள்ளது. 800 USD வரையிலான பொருள்களுக்கு சுங்க வரி இல்லாமல் இருந்த நிலையில், 50% வரி விதித்து டிரம்ப் அறிவித்தார். இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. வரும் 25-ம் தேதிக்கு பிறகு முன்பதிவு செய்தவர்கள் தங்களது பொருள்களை திரும்ப பெறவும் அஞ்சல்துறை அறிவுறுத்தியுள்ளது.
News August 23, 2025
WhatsApp-ல் இந்த மெசேஜை கிளிக் செய்யாதீங்க… WARNING!

மோசடியாளர்கள் நாளும் புதுப் புது உத்திகளை கண்டுபிடித்து வருகின்றனர். மகாராஷ்டிராவின் ஹிங்கோலியில், அரசு ஊழியர் ஒருவருக்கு வாட்ஸ்ஆப்பில் திருமண பத்திரிகையுடன் APK ஃபைல் ஒன்றும் வந்துள்ளது. அதை அவர் கிளிக் செய்த அடுத்த நொடி, அவரின் மொபைல் ஹேக் செய்யப்பட்டு, வங்கிக் கணக்கில் இருந்து ₹1.90 லட்சம் திருடப்பட்டது. போலீஸ் இதை விசாரித்து வருகின்றனர். ஆகவே மக்களே, இந்த மாதிரி மெசேஜ்களை கிளிக் செய்யாதீங்க.
News August 23, 2025
ரஜினி வரலாற்றில் முதல்முறை… குவியும் ‘கூலி’ வசூல்

ரஜினி நடிப்பில் வெளியாகி பட்டையை கிளப்பி வரும் ‘கூலி’ படத்தின் வசூல் ₹500 கோடியை நெருங்கிவிட்டதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வேகமாக இந்த சாதனையை படைத்த ரஜினி படம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், எந்திரன் பட இந்தி பதிப்பு வசூலை (₹23.84 கோடி) இந்த படம் எட்டே நாள்களில்(₹26.02 கோடி) முறியடித்துள்ளதாம். ரஜினி கரியரில் அதிகம் வசூலித்த ‘2.0’, ‘ஜெய்லர்’ ஆகிய படங்களின் வசூலை ‘கூலி’ முந்துமா?