News April 20, 2025
இந்தியா ராணுவத்தில் இணைய ஒரு வாய்ப்பு

அக்னிவீர் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்தில் பல்வேறு பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் நிறப்ப உள்ளன. இதற்கு பதிவு செய்வதற்காக, காரைக்காலைச் சேர்ந்த இளைஞர்களுக்கு 21.04.2025 அன்று அறிஞர் அண்ணா அரசு கல்லூரியிலும், புதுச்சேரியைச் சேர்ந்த இளைஞர்களுக்கு 22.04.2025 அன்று தாகூர் கலைக் கல்லூரியிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதை வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்கள்.
Similar News
News September 14, 2025
புதுவை: கூடுதல் விலையில் மது விற்ற கடைகளுக்கு அபராதம்

புதுவை கலால்துறை துணை ஆணையரும், எடையளவு துறை கட்டுப்பாட்டு அதிகாரியுமான மேத்யூ பிரான்சிஸ் தலைமையில், அதிகாரிகள் புதுவை நகர் முழுவதும் நேற்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது புதுவையில் உள்ள 10 மதுக்கடைகளில் கூடு தல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்த கடைகளுக்கு தலா ரூ.2,500 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பாண்லே பால் அதிக விலைக்கு விற்ற 2 மளிகை கடைகளுக்கு ரு.2500 அபராதம் விதிக்கப்பட்டது.
News September 14, 2025
புதுவை மக்களே.. உங்கள் பெயரில் இத்தனை SIM -ஆ?

புதுவை மக்களே… உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி எத்தனை சிம் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளதென்று உங்களுக்கு சந்தேகம் உள்ளதா? அப்படியென்றால் மத்திய அரசின் சஞ்சார்சாத்தி இணையம் மூலமாக உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி எத்தனை சிம் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடியும். இங்கே <
News September 14, 2025
புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்!

புதுச்சேரி புதிய நீதிமன்ற வளாகம் அருகேயுள்ள கடலூர் சாலையில், ரயில்வே மேம்பாலம் (ROB) கட்டுமான பணிகள் கடந்த ஜூலை.31ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதன் அடுத்த கட்ட பகுதியாக நாளை(செப்.15) முதல் AFT ரயில்வே கிராசிங்யை முழுமையாக மூடப்பட உள்ளது. எனவே, பொதுமக்கள் மாற்று பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.