News April 20, 2025

கரூர் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை

image

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் கரூர் மாவட்டத்தில் 48 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். இதற்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி. <>இங்கு க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

Similar News

News November 13, 2025

கரூர்: SIR கணக்கீட்டு படிவம் குறித்து சந்தேகமா?

image

கரூரில் SIR கணக்கீட்டு படிவம் குறித்து சந்தேகம் இருந்தால், உங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலரை நேரடியாக தொடர்பு கொள்ளலாம். ECINET இணையதளத்தில் பதிவு செய்தபின் “Book a Call with BLO” தேர்வு செய்து, கைபேசி எண் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை வழங்கி பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு உதவி எண்: 1950, வாட்ஸ்அப்: 9444123456 தொடர்பு கொள்ளவும்.

News November 13, 2025

அரவக்குறிச்சி அருகே விபத்து ஒருவர் பலி

image

அரவக்குறிச்சி சீத்தப்பட்டி அருகே, ராமு, முத்தழகன் மற்றும் நட்சத்திரா ஆகியோர் நான்கு சக்கர வாகனத்தில் சென்றபோது, வாகனம் தடுமாறி சாலையின் ஓரத்தில் உள்ள சுவற்றில் மோதியது. இதில் தலை குப்புற விழுந்த நட்சத்திரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், மற்ற இருவர் சிகிச்சையில் உள்ளனர். அரவக்குறிச்சி போலீசார் நேற்று விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்தனர்.

News November 13, 2025

குளித்தலை அருகே வசமாக சிக்கிய இருவர் அதிரடி கைது!

image

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர்மலை அரசு கலைக்கல்லூரி அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற குளித்தலை போலீசார் மது விற்ற அய்யனூரைச் சேர்ந்த பரத் (21), மலையாண்டி பட்டியைச் சேர்ந்த ராமன் (20) ஆகிய இரண்டு பேர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

error: Content is protected !!