News April 20, 2025
திருமணம் செய்து வைக்காததால் வாலிபர் தற்கொலை

ஆரணி, பையூர் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மகன் தமிழ்ச்செல்வன், கூலி வேலை செய்து வந்தார். தந்தையிடம் திருமணம் செய்து வைக்க தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். அதற்கு அவரது தந்தை குடும்ப சூழ்நிலை காரணமாக நாட்களை கடத்தி உள்ளார். இதனால் மன விரக்தியில் இருந்த அவர் தான் வேலை செய்யும் செங்கல் சூளையில் தூக்கிட்டு தற்கொலை கொண்டார். ஆரணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News August 9, 2025
தி.மலை: மாதம் ரூ.25,000 சம்பளத்தில் வேலை

தி.மலையில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் SALES TEAM MANAGER பணிக்கு 25காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு மாதம் ரூ.15,000 முதல் 25,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதிக்குள் <
News August 9, 2025
தி.மலை: சொட்டுநீர் பாசனம் 100% மானியம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் சொட்டு நீர் பாசன அமைப்பதற்கு 100% மானியம் வழங்கப்படுமென திருவண்ணாமலை வட்டாரத் தோட்டக்கலை துறை அறிவித்துள்ளது. விவசாயிகள் ஆதார் மற்றும் நில ஆவணங்களுடன் செங்கம் சாலையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு தோட்டக்கலை பூங்காவில் தோட்டக்கலை துறை அலுவலகத்திற்கு நேரில் வந்து மனு செய்யலாம். இத்தகவலை மாவட்ட தோட்டக்கலை உதவி இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்.
News August 9, 2025
தி.மலை: உங்க போனுக்கு தேவை இல்லாத மெசேஜ் வருதா?

தி.மலை மாவட்ட மக்களே உங்கள் செல்போனுக்கு பரிசு தொகை விழுந்துள்ளதாக வரும் குறுஞ்செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம். தங்களிடமிருந்து பணம் பறிக்கும் புதிய மோசடியாக இருக்க அதிக வாய்ப்புள்ளது. இவ்வாறு தேவையில்லாத குறுஞ்செய்தி உங்கள் போனுக்கு வருகிறதா? உடனே சைபர் கிரைம் உதவி எண்: 1930க்கு அழைக்கவும். அல்லது <