News April 20, 2025
அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்கள் நடத்தை விதிகள் 1973-ன் கீழ் புத்தகங்களை வெளியிடுவதற்கு முன் அனுமதி பெற வேண்டும். தற்போது, இந்த விதியில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி அரசின் செயல்பாடுகள் (அ) கொள்கைகள் தொடர்பான புத்தகங்களை தவிர, இலக்கியம், நாவல், கவிதை, தொழில்முறை உள்ளிட்ட புத்தகங்களை வெளியிட அனுமதி பெற வேண்டியதில்லை. அதேநேரம், தகுதியான அதிகாரிக்கு முறைப்படி தகவல் தெரிவித்து இனி புத்தகங்களை வெளியிட வேண்டும்.
Similar News
News December 25, 2025
அஜிதா ஹாஸ்பிடலில் அனுமதி.. விஜய் கடும் அப்செட்!

தூத்துக்குடி தவெக <<18649222>>நிர்வாகி அஜிதா ஆக்னல்<<>> உயிருக்கு ஆபத்தான நிலையில், ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாவட்டச் செயலாளர் பதவி தனக்கு வழங்கப்படாததால் நேற்று முன்தினம் தவெக ஆபிஸ் முன்பு தர்ணாவில் ஈடுபட்டதோடு விஜய்யின் காரை வழிமறித்தார். பதவி கிடைக்காத அதிருப்தியில் 2 நாள்களாக சாப்பிடாமல் இருந்த அஜிதா, உடல் நலக்குறைவால் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால், விஜய் கடும் அப்செட் ஆகியுள்ளாராம்.
News December 25, 2025
ATM-ல் பலமுறை CANCEL பட்டன் அழுத்துறீங்களா?

ATM மோசடியில் சிக்கக்கூடாது என்பதற்காக பணம் எடுத்த பிறகு பலமுறை CANCEL பட்டனை அழுத்தும் பழக்கம் பலருக்கு இருக்கிறது. இந்த Cancel பட்டன் பரிவர்த்தனைகளை ரத்து செய்ய மட்டுமே, மோசடிகளை தடுக்க அல்ல என RBI தெரிவித்துள்ளது. மோசடியில் சிக்காமல் இருக்க, PIN நம்பரை மறைத்து உள்ளிடுங்கள். சந்தேகப்படும்படியாக சாதனங்கள் ATM மெஷினில் இருந்தால் வங்கியிடம் புகாரளியுங்கள். பலரது பணத்தை பாதுகாக்கும், SHARE THIS.
News December 25, 2025
வன்முறை கும்பலை அடக்குவது நம் கடமை: CM ஸ்டாலின்

சிறுபான்மையினர் அச்சமின்றி வாழ துணை இருப்பதில் தான் பெரும்பான்மையினரின் பலமும், குணமும் உள்ளதாக CM ஸ்டாலின் கூறியுள்ளார். தனது X பதிவில், <<18667009>>ஜபல்பூர்-ராய்பூரில்<<>> சிறுபான்மையினரை வலதுசாரி கும்பல்கள் தாக்கியதாகவும், அவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவது நம் கடமை எனவும் CM பதிவிட்டுள்ளார். Xmas விழாவில் PM மோடி பங்கெடுக்கும்போதே, இவ்வாறு நடப்பது மக்களுக்கு தவறான செய்தியை சொல்லும் எனவும் கூறியுள்ளார்.


