News April 20, 2025

கோவையில் யானை தாக்கி முதியவர் பலி!

image

கோவை, காளம்பாளையம், தாயனூர் தெற்கு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி(60). இவர் சொந்தமாக ஆடுகளை வைத்து வளர்த்து வருகிறார். நேற்று ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்று விட்டு, பின் மாலை மீண்டும் வீடு திரும்பியுள்ளார். அப்போது, புதர் மறைவில் மறைந்திருந்த குட்டியுடன் கூடிய ஒற்றை காட்டு யானை தாக்கியதில் அவர் பலியானார். இச்சம்பவம் குறித்து காரமடை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News July 5, 2025

கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (05.07.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News July 5, 2025

கோவை: இபிஎஸ் பிரச்சார பயண திட்டம்

image

இபிஎஸ் பிரச்சார பயண திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜூலை 7 காலை 9 மணிக்கு வனபத்ரகாளியம்மன் கோயிலில் தரிசனம் செய்கிறார். தொடர்ந்து அதே பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் விவசாயிகளுடன் சந்திப்பு நடைபெற உள்ளது. மாலை 4.35 மணி அளவில் மேட்டுப்பாளையம் – ஊட்டி சாலையில் காந்தி சிலையில் இருந்து பேருந்து நிலையம் வரை ரோடு ஷோ. பின் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.

News July 5, 2025

கோவையில் வேலை வாய்ப்பு!

image

கோவை பீளமேட்டில் செயல்பட்டு வரும், தனியார் நிறுவனத்தில் உள்ள Trainee technician பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.25,000 – ரூ.50,000 வரை வழங்கப்படும். இதற்கு முன் அனுபவம் தேவையில்லை. டிப்ளமோ முடித்தவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதை வேலைதேடும் உங்க நண்பர்களுக்கு SHARE செய்யவும்.

error: Content is protected !!