News April 20, 2025
இந்தியா செல்ல மாட்டோம்: பாக். கிரிக்கெட் வாரியம்

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட பாகிஸ்தான் அணி இந்தியாவுக்குச் செல்லாது என பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வி தெரிவித்துள்ளார். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி, பாகிஸ்தானுக்கு வராமல் துபாய் மைதானத்தில் விளையாடியது போலவே, தாங்களும் செய்வோம் என அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார். இந்தாண்டு இந்தியா நடத்தும் மகளிர் உலகக் கோப்பை செப். 29 தொடங்கி அக். 26 வரை நடைபெற உள்ளது.
Similar News
News April 20, 2025
விஜய்க்கு போட்டியாக அஜித் படம் ரீ-ரிலீஸ்

பழைய படங்களை மீண்டும் ரீ-ரிலீஸ் செய்து கல்லா கட்டி வருகின்றனர். ‘கில்லி’, ‘சச்சின்’ போன்ற படங்கள் எதிர்பார்த்ததை விட வசூலை வாரிக்குவித்தன. அந்த வகையில், நடிகர் அஜித்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு மே 1-ம் தேதி ‘வீரம்’ படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது. ‘சச்சின்’ படத்தை போலவே நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாற்றப்பட்டு ரிலீசாகிறது. கடந்த 2014-ல் வெளியான இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கியிருந்தார்.
News April 20, 2025
மதிமுகவில் பற்றி எரியும் புகைச்சல்

மதிமுக நிர்வாகக்குழு கூட்டம் நடைபெறும் நிலையில் மல்லை சத்யாவுக்கும், துரை வைகோவுக்கும் இடையே வார்த்தை போர் வெடித்துள்ளது. தான் வைகோவின் தளபதி என்றும், அதற்கு அடையாளமாக அவரின் முகம் பதித்த மோதிரமும், சட்டைப் பாக்கெட்டில் படமும் இருக்கும் என மல்லை சத்யா குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், அவர் மட்டுமல்ல மதிமுகவில் உள்ள அனைவருமே வைகோவின் தளபதிகள் தான் என துரை வைகோ விமர்சித்துள்ளார்.
News April 20, 2025
தங்கம் விலை உயர்வால் விற்பனை, நகை தயாரிப்பு சரிவு

<<16157434>>தங்கம் விலை<<>> கிடுகிடுவென உயர்ந்து வந்தாலும் விற்பனை மற்றும் நகை தயாரிப்பு கடும் சரிவைக் கண்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். வரும் 30-ம் தேதி அட்சய திருதியை கொண்டாடப்படவுள்ள நிலையில், வழக்கமாக வரும் ஆர்டர்களை விட 50% சரிந்துள்ளதாக கோவை நகை தயாரிப்பு தொழிலாளர்கள் கூறியுள்ளனர். இதனால் அட்சய திருதியையொட்டி வரும் நாள்களில் தங்கம் விலை சற்று குறைய வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் கணித்துள்ளனர்.