News April 20, 2025
விநோதம்: இறந்தவர்களை மணக்கும் பெண்கள்!

சீனாவில் இறந்தவர்களை மணக்கும் விநோத பழக்கம் உள்ளது. இறந்தவர்கள் அடுத்த ஜென்மத்தில், பிரம்மச்சாரியாக இருப்பதை தவிர்க்க இந்த பேய் திருமணம் செய்யப்படுகிறது. இறந்த மகன், மகளுக்கு ஃபெய் சுங் மாஸ்டரை நியமித்து வரன் தேடுகிறார்கள். வரன் அமைந்ததும், கல்லறையில் இருந்து சடலம் எடுக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டு திருமணம் நடத்தப்படுகிறது. இந்த பழக்கத்திற்கு சீன அரசு தடைவிதித்திருந்தாலும் இன்னும் தொடர்கிறது.
Similar News
News November 13, 2025
விஜய்யை நாங்கள் கூட்டணிக்கு அழைக்கவில்லை: நயினார்

திமுக, பாஜக உடன் <<18272355>>கூட்டணி இல்லை<<>> என்று சமீபத்தில் விஜய் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தாங்கள் யாரையும் கூட்டணிக்கு அழைக்கவில்லை என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தேர்தலில் நிரந்தர நண்பரும், எதிரியும் இல்லை என்று கூறிய அவர், ஒரு கவுன்சிலர் கூட இல்லாத TVK, இப்படிப்பட்ட பெரிய வார்த்தைகளை பேச வேண்டுமா என்பதை விஜய் தான் முடிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
News November 13, 2025
BREAKING: விடுமுறை… நாளை முதல் 3 நாள்கள் அரசு அறிவிப்பு

வார விடுமுறையையொட்டி நாளை முதல் (நவ.14) 3 நாள்களுக்கு 920 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. சென்னையில் கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் ஆகிய இடங்களில் இருந்து கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்தும் சிறப்பு பஸ் இயக்கப்படும். www.tnstc.in இணையதளம், மொபைல் ஆப் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். SHARE IT
News November 13, 2025
டெல்லி சம்பவம்: ₹26 லட்சம் நிதி திரட்டிய டாக்டர்ஸ்

டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவத்தில், அடுத்தடுத்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த பயங்கரவாத சம்பவத்தில் தொடர்புடைய 4 டாக்டர்கள், வெடிபொருள் தயாரிப்பிற்காக ₹26 லட்சம் நிதி திரட்டி, டாக்டர் உமரிடம் வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்த நிலையில், பல்வேறு கோணங்களில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


