News April 20, 2025
3 நாள்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்: IMD

TN-ல் அடுத்த 3 நாள்களுக்கு இயல்பை விட வெப்பம் அதிகமாக இருக்கும் என்று IMD தெரிவித்துள்ளது. TN-ல் நாளை முதல் 23-ம் தேதி வரை ஒருசில இடங்களில் வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகரிக்கக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது. மேலும் 21ம் தேதி வரை தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம் எனவும், சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறியுள்ளது.
Similar News
News September 14, 2025
உக்ரைன் போருக்கு எவ்வளவு செலவாகிறது தெரியுமா?

உக்ரைனில் 2022-ல் இருந்து நடந்து வரும் போர், அடுத்த ஆண்டும் தொடர்ந்தால் 1 வருடத்துக்கு மட்டும் ₹10.5 லட்சம் கோடி தேவைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை போர் நின்றாலும் இதே தொகை தங்களுடைய ராணுவ படையை பராமரிக்க தேவைப்படும் எனவும் உக்ரைன் பாதுகாப்பு துறை அமைச்சர் டென்னீஸ் தெரிவித்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளில், உக்ரைனுக்கு அதிகமாக (₹6 லட்சம் கோடி) USA நிதியுதவி வழங்கியிருக்கிறது.
News September 14, 2025
GALLERY: மிலிட்டரியில் இந்த நாடுகள் தான் டாப்பு!

ஒரு நாட்டின் ராணுவ படைப்பலம் தான் அதன் வலிமையை உலகிற்கு எடுத்து காட்டுகிறது. அப்படி உலகில் மிகவும் சக்திவாய்ந்த ராணுவ படைபலத்தை கொண்ட டாப் நாடுகளின் பட்டியலை Global Firepower வெளியிட்டுள்ளது. இதில், டாப் 10 பட்டியலில் இருந்தே பாகிஸ்தான் வெளியேற்றப்பட்டுள்ளது. இந்தியா எந்த இடத்தில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள மேலே உள்ள படத்தை Swipe பண்ணவும்.
News September 14, 2025
மத்திய அமைச்சகத்தில் இணைந்த அதிமுக

மத்திய கல்வி அமைச்சகத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினராக அதிமுக MP இன்பதுரை நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய அளவில் NDA கூட்டணியில் அதிமுக அங்கம் வகிக்கும் நிலையில், கடந்த ஜூலை மாதம் ராஜ்யசபா MP-யாக தேர்வு செய்யப்பட்ட வழக்கறிஞர் இன்பதுரைக்கு இப்பொறுப்பு கிடைத்துள்ளது. அத்துறையின் கொள்கைகள், திட்டங்கள், கருத்து பரிமாற்றம், நடவடிக்கைகளில் சுதந்திரமாக செயல்பட ஆலோசனை குழு உறுப்பினருக்கு அதிகாரம் உள்ளது.