News April 19, 2025
PF ஏடிஎம் திட்டம் மே அல்லது ஜூனில் தொடக்கம்

PF பணத்தை எடுப்பதற்கு சில நேரங்களில் மிகுந்த சிரமத்தை மாத சம்பளதாரர்கள் அனுபவிக்கின்றனர். அவர்களின் துயரத்தை போக்கும் வகையில், புதிய திட்டத்தை EPF தயாரித்துள்ளது. இதன்கீழ், PF கணக்கில் உள்ள பணத்தை ஏடிஎம்மில் பயனாளர்கள் அவசரத் தேவைக்கு எடுக்க முடியும். இந்தத் திட்டத்தை வரும் மே மாத கடைசி (அ) ஜூனில் தொடங்க EPF திட்டமிட்டிருப்பதாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
Similar News
News October 15, 2025
BREAKING: TVK மாவட்ட செயலாளர் ஜாமின் தள்ளுபடி

கரூரில் விஜய் பிரசாரம் நடைபெற்றபோது ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு இடையூறு செய்ததாக. தவெக சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசன் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து ஜாமின் கேட்டு அவர் கரூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அவரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். ஏற்கெனவே கரூர் மாவட்ட செயலாளர் மதியழகனின் ஜாமின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
News October 15, 2025
தண்ணீர் குடிக்காவிட்டால் தலைவலி ஏற்படுமா?

அன்றாடம் போதுமான அளவு தண்ணீர் குடிக்க தவறினால் நமக்கு தலைவலி ஏற்படும் என்பது உண்மையா? ஆம். நம் உடலில் நீரிழப்பு ஏற்பட்டால் தலைவலி ஏற்படும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இதனால் மூளை சுருங்குவதோடு, நரம்புகளில் அழுத்தம் உண்டாகி சோர்வு, தலைச்சுற்றல் மற்றும் குமட்டல் ஏற்படும். எனவே, அன்றாடம் சராசரியாக 3 லிட்டர் தண்ணீர் மற்றும் ஜூஸ் உள்ளிட்ட நீர்ச்சத்து நிறைந்த பானங்களை அருந்தலாம்.
News October 15, 2025
தீபாவளிக்கு 4 நாள்கள் விடுமுறையா? வந்தது அப்டேட்

தீபாவளி பண்டிகைக்கு மேலும் ஒருநாள்(அக்.21) விடுமுறைவிட அரசு பரிசீலனை செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. கல்வி, வேலை உள்ளிட்ட காரணங்களுக்காக சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட நகரங்களில் உள்ளோர் சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். இதனிடையே, போக்குவரத்து சிரமங்களை தவிர்க்க வெள்ளி, செவ்வாய் அன்றும் சேர்த்து 5 நாள்கள் விடுமுறை விட அரசுக்கு, அரசு ஊழியர்கள் சங்கம் ஏற்கெனவே கோரிக்கை விடுத்திருந்தது.