News April 4, 2024
காங்கிரஸில் இருந்து விலகினார்

காங்கிரஸ் கட்சியின் முக்கிய செய்தித் தொடர்பாளராக இருந்து வந்த கவுரவ் வல்லப் அக்கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். திசையின்றி பயணிக்கும் காங்கிரஸில் செயல்பட தனக்கு விருப்பமில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், சனாதனத்திற்கு எதிரான முழக்கங்களை எழுப்பவோ, நாட்டை வளப்படுத்துபவர்களை துஷ்பிரயோகம் செய்கிறார்கள் என்றோ, தன்னால் கூற முடியாது என்றும் கூறியுள்ளார்.
Similar News
News January 12, 2026
BREAKING.. விஜய்க்கு நிம்மதி

பொங்கலுக்கு பிறகு விஜய்க்கு மீண்டும் சம்மன் அளிக்க CBI திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கரூர் துயரம் தொடர்பாக 2 நாள்கள் விஜய்யிடம் விசாரணை நடத்தப்படும் என கூறப்பட்டது. ஆனால் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, விசாரணையில் இருந்து விஜய் விலக்கு கோரியதை CBI ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் விஜய் சற்று நிம்மதி அடைந்துள்ளார். இன்று <<18837290>>விஜய்யிடம் 4:15 மணி நேரம் விசாரணை<<>> நடத்தப்பட்டது
News January 12, 2026
இரவிலும் மழை பெய்யும்

குமரிக்கடல், அதனையொட்டிய பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்யக்கூடும் என IMD தெரிவித்துள்ளது. அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், கள்ளக்குறிச்சி, கரூர், நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருச்சி, விழுப்புரம் ஆகிய 14 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
News January 12, 2026
டெல்லியில் காங்., தவெக கூட்டணி பேச்சுவார்த்தையா?

ஆட்சியில் பங்கு கேட்டு காங்கிரஸ் திமுகவுக்கு ஒருபுறம் நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், மறுபுறம் தவெக-காங்கிரஸ் கூட்டணி குறித்த பேச்சும் தொடர்கிறது. இந்நிலையில் சிபிஐ விசாரணைக்காக டெல்லி சென்றுள்ள விஜய்யிடம் பேசலாம் என காங்கிரஸின் ஒரு தரப்பு ராகுலிடம் ஆலோசித்துள்ளனர். ஆனால், இப்போது பேச வேண்டாம், கொஞ்சம் பொறுமையாக இருங்கள் என கட்சியினருக்கு ராகுல் ஸ்ட்ரிக்ட்டாக அறிவுறுத்தியுள்ளாராம்.


