News April 19, 2025
யார் இந்த சி.பா.ஆதித்தனார்?

சி.பா.ஆதித்தனார் தூத்துக்குயில் உள்ள காயாமொழி என்னும் ஊரில் 1905ஆம் ஆண்டு பிறந்தவர். இளமையிலேயே இவருக்கு எழுத்து, வெளியீடு ஆகியவற்றில் ஆர்வமிருந்தது. சிங்கப்பூரில் இருந்து தமிழகம் திரும்பியதும் 1942ல் மதுரை முரசு என்னும் இதழை தொடங்கினார். பின்னர் இந்த இதழ் தடை செய்யப்பட்டது. பின்னர் நவ.1 1942ல் தினந்தந்தி நாளிதழை துவங்கினார். இந்த இதழ் தமிழகத்தின் வெவ்வேறு நகரங்களுக்கு பரவியது. Share It.
Similar News
News September 28, 2025
தென்காசி மாவட்ட இரவு ரோந்து பணி காவலர்கள்

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல் துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று (27-09-25) தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விபரம். அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் -9884042100 ஐ தொடர்பு கொள்ளலாம்.
News September 27, 2025
தென்காசி எம்.பி-க்கு வாழ்த்து தெரிவித்த திமுக நிர்வாகிகள்

2026 சட்டமன்றத் தேர்தலில் தென்காசி, சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளின் திமுக தேர்தல் பொறுப்பாளராக தென்காசி எம்.பி., டாக்டர். ராணி ஸ்ரீகுமார்-ஐ நியமனம் செய்யபட்டு உள்ளார். இன்று மாநில வர்த்தக அணி நிர்வாகி, முன்னாள் எம்எல்ஏ முத்துச்செல்வி தலைமையில் விளையாட்டு மேம்பாட்டு அணி நிர்வாகி கேபிள் கணேசன் உள்ளிட்ட திமுகவினர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
News September 27, 2025
தென்காசி மக்களே உங்க பகுதில குடிநீர் வருதா??

தென்காசி மாவட்டத்தில் 13521 குடிநீர் இணைப்புகள் கொடுக்கபட்டு குடிநீர் 2 -3 நாட்கள் ஒரு முறை வழங்கபட்டு வருகிறது. புதிய வீடுகளுக்கு – ரூ.6000 இணைப்பு வழங்கபடுவதாக நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. உங்கள் பகுதிகளில் குடிநீர் வராமல் இருந்தாலோ (அ) குடிநீர்க்கு அதிக கட்டணங்கள் வசூலித்தாலோ தென்காசி நகராட்சி ஆணையரிடம் 04633-222228 தெரியபடுத்துங்கள். தெரியாதவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க..