News April 19, 2025
திருமணத்தை மீறிய உறவு கிரிமினல் குற்றமில்லை: DL HC

திருமணத்தை மீறிய உறவு கிரிமினல் குற்றமில்லை என்று டெல்லி ஹைகோர்ட் (DL HC) தெரிவித்துள்ளது. மனைவி திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக கூறி, கணவர் தொடுத்த மேல்முறையீட்டு மனு மீது HC தீர்ப்பளித்தது. அப்போது, ஏற்கெனவே இதேபோன்ற இன்னொரு வழக்கில் உச்சநீதிமன்றம் திருமணத்தை மீறிய உறவு தனிநபர் ஒழுக்கம் சார்ந்த பிரச்னை, கிரிமினல் குற்றமில்லை என கூறியிருப்பதை சுட்டிக்காட்டி மனுவை தள்ளுபடி செய்தது.
Similar News
News September 10, 2025
Asia Cup: இன்று இந்தியா Vs UAE மோதல்

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இன்று இந்தியா – UAE அணிகள் மோதுகின்றன. நடப்பு சாம்பியனான இந்தியா கோப்பையை தக்க வைக்கும் முனைப்போடு களம் இறங்குகிறது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி UAE அணியை விட பேட்டிங், பவுலிங்கில் வலுவாக உள்ளது. எனவே இந்தியா வெற்றியுடன் ஆரம்பிக்கும் என ரசிகர்கள் நம்புகின்றனர். துபாயில் நடக்கும் இந்த போட்டி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.
News September 10, 2025
மினுமினுக்கும் கயாடு லோஹர்

எனக்கு மேக்கப் எல்லாம் தேவையில்லை… இயற்கையான அழகிலேயே ரசிகர்களின் மனங்களை கவர முடியும் என கயாடு லோஹர் கூலாக போஸ் கொடுத்து பல புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். நீரின்றி அமையாது உலகு.. இனி நீ இன்றி இருக்காது சினிமா என ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து வருகின்றனர். ‘டிராகன்’ வெற்றியை தொடர்ந்து கயாடு, தனது சம்பளத்தை ₹35 லட்சத்துக்கு மேல் உயர்த்திவிட்டதாக தகவல்.
News September 10, 2025
இன்ப அதிர்ச்சி கொடுக்கும் ரவி மோகன்

தனது பிறந்தநாளை முன்னிட்டு ரவி மோகன் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கப் போகிறார். இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள அவர், யோகி பாபுவை வைத்து எடுக்கும் ‘AN ORDINARY MAN’ படத்தின் ப்ரோமோ இன்று மாலை 6.06 மணிக்கு வெளியாகவுள்ளது. ரவி மோகனின் டைரக்ஷனை காண ரசிகர்களும் ஆவலோடு காத்திருக்கின்றனர். மேலும், அவர் புதிதாக நடிக்கவுள்ள படங்களின் அறிவிப்பும் வெளியாகும் என்று கூறப்படுகிறது.