News April 19, 2025
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

விழுப்புரம் கோட்ட அளவில், ஏப்ரல் மாத விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 22.04.2025 அன்று காலை 11 மணியளவில், விழுப்புரம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. மேற்படி கூட்டத்தில், விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர், திருவெண்ணெய்நல்லூர் மற்றும் கண்டாச்சிபுரம் வட்டங்களுக்குட்பட்ட அனைத்து விவசாய பிரதி நிதிகளும் தவறாது கலந்துகொள்ளலாம்.
Similar News
News September 17, 2025
விழுப்புரம்: VOTER லிஸ்டில் உங்க பெயர் இருக்கா?

விழுப்புரம் மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. <
News September 17, 2025
இட ஒதுக்கீடு தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்திய எம்ஆர்கே

விழுப்புரத்தில் உள்ள ஏ.கோவிந்தசாமி மணிமண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு போராட்ட தியாகிகளுக்கு, தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் க.பொன்முடி, இரா.லட்சுமணன், செஞ்சி மஸ்தான், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புஷ்பராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
News September 17, 2025
விழுப்புரத்தில் “சமூக நீதி நாள்” உறுதிமொழி

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் “சமூக நீதி நாள்” உறுதிமொழியினை அனைத்துத் துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இன்று (17.09.2025) ஏற்றுக்கொண்டனர். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அரிதாஸ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பொறுப்பு திரு.ராஜூ உள்ளிட்டோர் உடனிருந்தனர்.