News April 19, 2025
பெரம்பலூர்: கோடை விடுமுறைக்கு சூப்பர் ஸ்பாட்

பெரம்பலூர், லாடபுரம் கிராமத்திற்கு அருகே உள்ள பச்சை மலையில் எழில் மிகு மயிலூற்று அருவி உள்ளது. கோடையில் நண்பர்களுடனும் குடும்பத்துடனும் அசதி இல்லாத ஒரு நாள் சுற்றுலாவிற்கு இந்த அருவிதான் சொர்க்கம். பருவமழையில் செழித்து கோடையில் நமக்கு அமுதாக மாறும் இந்த அருவிவை தேடி மக்கள் படையெடுத்து வருகின்றனர். பெரம்பலூர் மட்டுமின்றி திருச்சி கரூர் போன்ற அண்டை மாவட்டங்களிலிருந்தும் மக்கள் வருகின்றனர். SHARE IT.
Similar News
News August 9, 2025
பெரம்பலூர் மாவட்ட காவல்துறை அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் 40 இருசக்கர வாகனங்கள் ஒரு 4 சக்கர வாகனம் மற்றும் 2 ஆறு சக்கர வாகனங்கள் என மொத்தம் 43 வாகனங்களை 14.8.2025-ம் தேதி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தி பொது ஏலத்தில் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 7904136038, 9498162279, 9787658100 என்ற எண்ணை அழைக்கலாம் என மாவட்ட காவல்துறை மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 8, 2025
மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா தலைமையில் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்றக் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட எஸ்பி அனைத்து காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகள் முன்னிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகள் குறித்து ஆய்வு செய்தார்.
News August 8, 2025
பெரம்பலூர்: ஆடி வெள்ளி இதை தெரிஞ்சிக்கோங்க!

ஆடி மாதத்தில் நாம் என்ன செய்ய வேண்டும், செய்ய கூடாது
செய்யக்கூடியவை!
✅இறை வழிபாடு
✅நேர்த்திக்கடன்கள்
✅தாலி சரடு மாற்றுதல்
✅ஆடிப்பெருக்கு வழிபாடு
✅கூழ் படைத்தல்
✅விவசாயம்
செய்யக்கூடாதவை!
❎திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகள்
❎ வீடு மாற்றம் மற்றும் கிரகப்பிரவேசம்
❎ குழந்தைகளுக்கு மொட்டை அடித்தல்
❎வளைகாப்பு
❎பெண் பார்த்தல்
போன்றவற்றை செய்ய கூடாது. அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்கள்!