News April 19, 2025
இந்தி கட்டாயமா? அனுமதிக்க மாட்டோம்

மகாராஷ்டிராவில் 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தி கட்டாயம் என்று மாநில அரசு அறிவித்திருப்பதற்கு சிவசேனா (UBT) கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே, இந்தி மீது தனது கட்சிக்கு எந்த வெறுப்பும் இல்லையென்றும், அது கட்டாயமாக்கப்படுவதை மட்டுமே எதிர்க்கிறோம் என்றும் கூறினார். தமிழக அரசும் இதே கருத்தைதான் முன் வைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 15, 2025
முகம் எப்போதும் பொலிவுடன் இருக்க 5 டிப்ஸ்

* பகலில் குறைந்தது 2‑3 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும்.
* தினமும் முகத்தை நன்றாக சுத்தம் செய்யவும். தூய்மையான துணியால் மென்மையாக உலர்த்தவும்.
* பழங்கள், கீரைகள், புரதம் அதிகம் உள்ள உணவுகள் சாப்பிடவும்.
* சரியான தூக்கம் (6‑8 மணி) முக்கியம்.
* SPF உள்ள சன்ஸ்கிரீன்கள் பயன்படுத்தி சருமத்தை பாதுகாக்கலாம்.
மேலே இந்த குறிப்புகள் படங்களாக உள்ளன. அதை ஒவ்வொன்றாக swipe செய்து பாருங்க.
News September 15, 2025
அதிமுக வாக்குகள் விஜய்க்கு செல்லாது: டி.ஜெயக்குமார்

அதிமுக ஒருங்கிணைப்பு குறித்த செங்கோட்டையனின் கோரிக்கை குறித்து EPS மட்டுமே முடிவெடுப்பார் என்று டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். எம்ஜிஆர் படத்தை விஜய் பயன்படுத்துவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, எல்லா தலைவர்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தலைவர் எம்ஜிஆர்; அவரது படத்தை யாரு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். அதற்காக அதிமுகவின் வாக்குகள் விஜய்க்கு செல்லாது என்றும் கூறியுள்ளார்.
News September 15, 2025
இனி இ-சேவை மையங்களுக்கு செல்ல வேண்டாம்

டிசம்பரில் இருந்து புதிய ஆதார் செயலி பயன்பாட்டுக்கு வரவிருப்பதாக UIDAI தலைமைச் செயல் அதிகாரி புவனேஷ்குமார் அறிவித்துள்ளார். இதனால், பொதுமக்கள் இனி இ-சேவை மையங்களுக்கே செல்லத் தேவையில்லை. தற்போது முகவரி மாற்றுவதை போலவே, செல்போன் எண், பிறந்த தேதி உள்ளிட்டவற்றை இந்த செயலி (face authentication) மூலம் மாற்ற முடியும். இதனால், பயனர்களின் விவரம் தவறாக பயன்படுத்தப்படுவதும் தடுக்கப்படும் என்றார்.