News April 19, 2025

நடிகர் மீது வழக்குப்பதிவு

image

துணை நடிகை அளித்த புகாரில் நடிகர் ‘காதல்’ சுகுமார் மீது மாம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருமணமானதை மறைத்து, தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, தனிக்குடித்தனம் நடத்தி நகை, பணம் மோசடி செய்ததாக துணை நடிகை புகார் அளித்திருந்தார். பல படங்களில் துணை நடிகராக நடித்துள்ள சுகுமார், ‘காதல்’ படத்தில் ஹீரோ பரத்திற்கு நண்பனாக நடித்ததன் மூலம் பிரபலமாகி ‘காதல்’ சுகுமார் எனப் பெயர் பெற்றார்.

Similar News

News August 22, 2025

விஜய்க்கு ஆசை இருக்கு, செயல் இல்லை: திமுக விமர்சனம்

image

இன்று தவெக மாநாட்டில் விஜய் தன் பேச்சில், திமுகவை கடுமையாக தாக்கினார். இந்நிலையில், திமுக அமைப்பு செயலாளர் TKS இளங்கோவன், திமுகவினரை திட்டினால் தான் முதல்வராக முடியும் என விஜய் நினைப்பது கற்பனை என்று விமர்சித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்று கூட விஜய்க்கு தெரியவில்லை என்ற அவர், முதல்வராக ஆசைப்படும் விஜய்யிடம் பேச்சு இருக்கிறது, ஆனால் செயல் இல்லை என்று பதிலடி கொடுத்துள்ளார்.

News August 22, 2025

ராசி பலன்கள் (22.08.2025)

image

➤ மேஷம் – போட்டி ➤ ரிஷபம் – முயற்சி ➤ மிதுனம் – தடங்கல் ➤ கடகம் – அன்பு ➤ சிம்மம் – உயர்வு ➤ கன்னி – சாந்தம் ➤ துலாம் – வரவு ➤ விருச்சிகம் – கடன்தீரல் ➤ தனுசு – மேன்மை ➤ மகரம் – அமைதி ➤ கும்பம் – புகழ் ➤ மீனம் – ஆதரவு.

News August 21, 2025

TN-க்கு மோடி செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்: விஜய்

image

PM மோடி மற்றும் பாஜக அரசை கடுமையாக விமர்சனம் செய்த விஜய் TN மக்களுக்காக இரு முக்கிய கோரிக்கைகளையும் வைத்துள்ளார். தமிழக மக்களுக்கு நன்மை செய்வதாக PM மோடி நினைத்தால், முதலில் கச்சத்தீவை மீட்டு கொடுங்கள் என்றார். மேலும், நாள்தோறும் நீட் தேர்வால் நடக்கும் அவலங்களை பேசவே அச்சமாக இருப்பதாக கூறிய அவர், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!