News April 19, 2025

வெயிலில் இருந்து கறவை மாடுகளை பாதுகாக்க ஆலோசனை

image

தேனி மாவட்டத்தில் கறவை மாடுகள் வளர்ப்பு அதிகம் காணப்படுகிறது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில், கறவை மாடுகள் மற்றும் காளைகளை வெயிலில் கட்டி வைக்கக்கூடாது. உலர்ந்த தீவனங்கள், குச்சி புண்ணாக்கு, தாது உப்புக்கள் ஆகியவை தேவையான அளவில் உணவாக தர வேண்டும். குளிர்ச்சியான இடத்தில் கால்நடைகளை கட்டி வைக்க வேண்டும் என கால்நடை துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Similar News

News August 8, 2025

தேனி இளைஞர்களே வேலை – ரூ.62265 வரை சம்பளம்

image

ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் Assistant பதவிக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில், தமிழகத்தில் இருந்து 74 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்த பதவிக்கு ரூ.22405 – ரூ.62265 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணபிக்க கடைசி தேதி – 17.08.2025. மேலும் விவரங்களுக்கு <>இங்கே க்ளிக்<<>> செய்யவும். இதை உங்க நண்பர்களுக்கு *SHARE* பண்ணுங்க.

News August 8, 2025

போடி: கடன் தொல்லையால் பெண் தற்கொலை

image

போடியை சேர்ந்தவர் சீனியம்மாள் (60). இவர் மகளிர் குழு தலைவியாக இருந்து வரும் நிலையில் இவரது குழுவில் 60 பெண்களுக்கு லோன் வாங்கி கொடுத்துள்ளார். அவற்றில் சிலர் லோன் கட்டாததால் இவர் கடன் வாங்கி அதனை செலுத்தியுள்ளார். இந்நிலையில் கடன் தொல்லை அதிகரித்ததால் மன உளைச்சலில் இருந்து வந்த சீனியம்மாள் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போடி போலீசார் வழக்குப்பதிவு.

News August 8, 2025

தேனியில் இலவச தையல் மிஷின் APPLY பண்ணுங்க!

image

தேனியில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு தேனி மாவட்ட சமூக நல அலுவலரை 04546-254368 அணுகவும். இத்தகவலை SHARE செய்யவும்.

error: Content is protected !!