News April 19, 2025
மனைவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கணவர்

ஆவடி கன்னடபாளையம் பகுதியில் கார்மெண்ட்ஸ் நடத்தி வருபவர் சத்யா(42). இவரது கணவர் ஜெபராஜ் உடனான கருத்து வேறுபாடால் இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில், ஜெபராஜ் நேற்று மாலை பெட்ரோல் கேனுடன் கார்மெண்ட்ஸ் உள்ளே நுழைந்து தன் மீதும் தன் மனைவி மீதும் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீ வைத்துள்ளார். 50 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News July 11, 2025
குரூப் 4 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு…

▶திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (ஜூலை 12) குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது.
▶தேர்வு எழுத ஹால் டிக்கெட் (HALL TICKET) கட்டாயம்.
▶ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை (ஏதேனும் ஒன்று) அவசியம்.
▶கருப்பு மை கொண்ட பேனா மட்டுமே அனுமதி.
▶காலை 9 மணிக்குள்ளேயே தேர்வறைக்குள் செல்ல வேண்டும்.
▶வாட்ச், மோதிரம், பெல்ட் அணிய கூடாது.
தேர்வு எழுதும் அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
News July 11, 2025
ரூ.15 லட்சம் வரை விபத்து காப்பீடு 1/2

இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, புதிய விபத்து காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காப்பீடு, ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் வரையிலான செலவுகளை கவர் செய்யக்கூடியது. விபத்தில் உயிரிழந்தால் 100% காப்பீடு தொகை வழங்கப்படும். விபத்தில் எலும்புமுறிவு ஏற்பட்டால் ரூ.25,000 வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு திருவள்ளூர் அஞ்சலகத்தை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க. <<17028562>>தொடர்ச்சி<<>>
News July 11, 2025
ரூ.15 லட்சம் வரை விபத்து காப்பீடு 2/2

▶18-65 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த காப்பீடை பெறலாம்.
▶ஆப்ஷன் 1 – ரூ.5 லட்சம் காப்பீடுக்கு வருடம் ரூ.355 கட்டினால் போதும்.
▶ஆப்ஷன் 2 – ரூ.10 லட்சம் காப்பீடுக்கு வருடம் ரூ.555கட்டினால் போதும்.
▶ஆப்ஷன் 3- ரூ.15 லட்சம் காப்பீடுக்கு வருடம் ரூ.755 கட்டினால் போதும்
▶இந்த லிங்கில் திருவள்ளூரில் உள்ள <