News April 19, 2025
இயற்கை எழில் கொஞ்சும் தியாசபிகல் சொசைட்டி

அன்னிபெசன்ட் அம்மையாரால் 1875ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பிரம்மஞான சபையின் தலைமையகம் ‘தியாசபிகல் சொசைட்டி’ சென்னை அடையாறு பகுதியில் உள்ளது. சமத்துவத்தை போற்றும் விதமாக உருவாக்கப்பட்ட இந்த சபை, தற்போது இயற்கை எழில் கொஞ்சும் பூங்காவாகவும் விளங்குகிறது. உலகப் புகழ்பெற்ற அடையாறு ஆலமரமும் இந்த பூங்காவில் அமைந்துள்ளது. உயிர்களின் பல்லுயிர்த் தன்மைக்கு அடையாளமாகவும் இந்தப் பூங்கா திகழ்கிறது.
Similar News
News August 8, 2025
அரசு பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்த அமைச்சர்கள்

பாலவாக்கம் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் புதிதாக கூடுதல் கட்டிடத்தை அமைச்சர் மா.சுபிரமணியன் மற்றும் அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர்கள் திறந்து வைத்தனர். இந்நிகழ்வின் போது சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த்ரமேஷ், துறையின் செயலாளர்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு பங்கேற்றனர்.
News August 8, 2025
சென்னையில் EB கட்டணம் அதிகமா வருதா?

சமீபத்தில் சென்னையில் வசிக்கும் ஒருவருக்கு ரூ.91,000 மின் கட்டணம் வந்தது அனைவரையும் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. தமிழ்நாடு அரசின் TANGEDCO என்ற செயலியில் புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். ஷேர் பண்ணுங்க
News August 8, 2025
மாநில கல்விக்கொள்கையை வெளியிட்டார் முதல்வர்

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், மாநில கல்விக்கொள்கையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 8) வெளியிட்டார். மாநில கல்விக்கொள்கை குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதியரசர் முருகேசன் தலைமையில் கடந்த 2022ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு குழு அமைத்தது. குழுவின் அறிக்கை கடந்த ஜூலை மாதம் முதலமைச்சரிடம் சமர்ப்பித்த நிலையில், இன்று கொள்கையை முதலமைச்சர் வெளியிட்டார்.