News April 19, 2025
வெள்ளியங்கிரி மலையில் ஒருவர் உயிரிழப்பு

தூத்துக்குடியைச் சேர்ந்த புவனேஷ்வரன் (18) என்ற இளைஞர், கோவை, வெள்ளிங்கிரி மலையில் ஏழாவது மலையில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, நேற்றிரவு கீழே இறங்கியுள்ளார். அப்போது கால் தவறி கீழே சரிந்த அவர், 10 மீட்டர் ஆழத்தில் உருண்டு விழுந்துள்ளார். உடனடியாக டோலி பாரம் தூக்கும் பணியாளர்கள் அவரை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Similar News
News April 30, 2025
தொழிலாளியின் கன்னத்தை கடித்து துப்பிய போதை ஆசாமி

கோவை ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த இம்ரான்(38), லாலி ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடைக்குச் சென்றபோது, அங்கு வந்த ராஜனுடன் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராஜன், இம்ரானின் கன்னத்தை கடித்து துப்பினார். காயமடைந்த இம்ரான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News April 29, 2025
கோவை: பள்ளத்தில் கவிழ்ந்த கார்

கோவை சூலூரை சேர்ந்த ஸ்ரீநிவேதா, தனது தாயார் வாணியுடன் காரில் செஞ்சேரி மலை முருகன் கோயிலுக்கு சென்றிருக்கிறார். பார்க்கிங்கில் காரை நிறுத்த முயன்ற போது, பிரேக்கிற்கு பதிலாக ஆக்சிலேட்டரை மிதித்ததால், 40 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக ஏர்பேக் ஓபன் ஆனதால், இருவரும் சிறிய காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News April 29, 2025
கோவை: முக்கிய காவல் நிலைய தொடர்பு எண்கள்!

காந்திபுரம் – 9498101143.
ஆர்.எஸ்.புரம் – 0422-2475777.
மதுக்கரை – 9498101184.
பேரூர் – 0422-2607924.
தொண்டாமுத்தூர் – 0422-2617258.
பெ.நா.பாளையம் – 9498101189.
மேட்டுப்பாளையம் – 9498101186.
அன்னூர் – 9498101173.
கருமத்தம்பட்டி – 9498101178.
சூலூர் – 7845175782.
பொள்ளாச்சி டவுன் – 04259-224433.
ஆனைமலை – 04253-282230.
வால்பாறை – 9487374392. இதை SHARE பண்ணுங்க.