News April 19, 2025

பெங்களூரு-கொல்லம் இடையே சேலம் வழியாக சிறப்பு ரெயில்

image

எஸ்.எம்.வி.டி. பெங்களூரு-கொல்லம் சிறப்பு ரெயில் (06585) இன்று 19-ஆம் தேதி (சனிக்கிழமை) எஸ்.எம்.வி.டி. பெங்களூரு ரெயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 3.50 மணிக்கு புறப்பட்டு கிருஷ்ணராஜபுரம், பங்காரு பேட்டை வழியாக 8.20 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 8.30 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு வழியாக மறுநாள் காலை 6.20 மணிக்கு கொல்லம் சென்றடையும்.

Similar News

News January 16, 2026

சேலம்: அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

image

அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால், ஆடியோ/வீடியோ ஆதாரங்களை சேகரிக்கவும். பின்பு, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறை +91-44-22321090 / 22321085 / 22310989 / 22342142 என்ற தொலைபேசி எண்கள் மூலமாகவோ, அல்லது<> இணையதளம் <<>>மூலமாகவோ அணுகி புகார் அளியுங்கள். சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு(0427-2418735) அலுவலகத்திலோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலோ நேரில் சென்றும் புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க!

News January 16, 2026

சேலம் ரயிலில் ஆபத்தா? கவலை வேண்டாம்!

image

சேலம் ரயில்வே போலீசார் பயணிகளின் பாதுகாப்பிற்காக 94981-01963 என்ற வாட்ஸ்அப் எண்ணை அறிமுகம் செய்துள்ளனர். இந்த எண்ணில் பயணிகள் தங்களின் புகார்களை எளிதாகப் பதிவு செய்யலாம். மேலும், “நகைகளுடன் உறங்க வேண்டாம், அறிமுகமில்லாதவர்களிடம் அதிகம் பேச வேண்டாம்” என எச்சரித்துள்ளனர். அவசர உதவிக்கு 139, 1512 அல்லது 99625-00500 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

News January 16, 2026

உஷார் மக்களே: சேலத்தில் நடக்கும் பகீர் மோசடி!

image

சேலத்தில் வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் போலி ஆன்லைன் லாட்டரி மோசடிகள் அதிகரித்து வருகின்றன. கேரளா லாட்டரி மற்றும் பரிசு விழுந்ததாக ஆசை காட்டி, ‘லிங்க்’ மூலம் பணத்தைப் பறிக்கும் கும்பலிடம் சிக்கி தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழக்கின்றனர். இத்தகைய மோசடிகளைத் தடுக்கவும், பொதுமக்கள் விழிப்புடன் இருக்கவும் அரசு நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை எழுந்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!