News April 4, 2024

சற்றுமுன்: சக்திவாய்ந்த நிலநடுக்கம்

image

ஜப்பானின் ஹோன்ஷூ கிழக்கு கடற்கரைக்கு அருகே சற்றுமுன் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கியதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்துள்ளனர். இதனால் ஏற்பட்ட பாதிப்பு குறித்தும், சுனாமி எச்சரிக்கை தொடர்பாகவும் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. நேற்று தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 9 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Similar News

News January 3, 2026

நாமக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (ஜன.2) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News January 2, 2026

பிரியாணியுடன் புத்தாண்டு கொண்டாடிய இந்தியர்கள்!

image

புத்தாண்டுக்கு முந்தைய நாள் (டிச.31) மாலை முதல் இரவு வரை அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளை Swiggy பகிர்ந்துள்ளது. அதில் வழக்கம் போல், 2.19 லட்சம் ஆர்டர்களுடன் பிரியாணி முதலிடத்திலும், 90,000 ஆர்டர்களுடன் பர்கர் 2-ம் இடத்திலும் உள்ளது. ஆச்சரியமாக இந்த பட்டியலில் உப்புமாவும் (4,244 ஆர்டர்கள்) இடம்பிடித்துள்ளது. டீ இல்லாமல் கொண்டாட்டமா எனும் வகையில், 26,618 கப் டீக்களும் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.

News January 2, 2026

‘ரஜினி 173’ இயக்குநர் யார்? நாளை விடைதரும் RKFI

image

கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் ‘ரஜினி 173’ படம் உருவாக உள்ளது. இந்த படத்தில் இருந்து சுந்தர் சி விலகிய பின், படம் குறித்த எந்த அப்டேட்டையும் படக்குழு வெளியிடவில்லை. இதனிடையே படத்தை யார் இயக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்தது. இந்நிலையில் நாளை காலை 11 மணிக்கு ரஜினி 173 குறித்த அறிவிப்பு வெளியாகும் என ராஜ்கமல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!