News April 19, 2025

ஓட்டுநர், நடத்துநர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

image

போக்குவரத்து கழகத்தில் 1004 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்கள் உள்ளன. 24 – 40 வயதுடையவராக இருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 18 மாதங்கள் கனரக வாகனம் ஒட்டியதற்கான அனுபவம் வேண்டும். எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்காணல் உண்டு. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இந்த <>லிங்கை <<>>க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்

Similar News

News February 24, 2026

ஒருங்கிணைப்பு அலுவலர்களுக்கான கூட்டம்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (பிப்.24 )ஆம் தேதி தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள ஒருங்கிணைப்பு அலுவலர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான சந்திரகலா தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கான கூட்டம் நடந்தது .இதில் தேர்தல் பணிகள் மற்றும் கடமைகள் குறித்து அதிகாரிகளிடம் ஆட்சியர் பேசினார்.

News February 24, 2026

இலவச வீட்டு மனை பட்டா வருவாய் கோட்டாட்சியர்

image

கரியாக்குடல் பகுதியில் இன்று பிப்.24 ஆம் தேதி இலவச வீட்டு மனை பட்டா வழங்குவது குறித்து வருவாய் கோட்டாட்சியர் ரமேஷ் நேரில் ஆய்வு செய்தார். அப்போது இலவச வீட்டு மனை பட்டா கேட்டு மனு கொடுத்தவர்கள் எத்தனை ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட இடத்தில் வசிக்கின்றனர். அவர்களது வருமானம் , குடும்ப உறுப்பினர்களை கோட்டாட்சியர் கேட்டறிந்தார் . ஆய்வின் போது நெமிலி வட்டாட்சியர் ராஜலட்சுமி உடன் இருந்தார்.

News February 24, 2026

ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (பிப்-24) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!