News April 19, 2025
இனி இணைய வழியில் மட்டுமே விண்ணப்பிக்கலாம்

மயிலாடுதுறையில் அனைத்து வகை கனிமங்களும் எடுத்துச் செல்வதற்கு வழங்கப்படும் நடைசீட்டுகளை இனிமேல் இணைய வழி வாயிலாக மட்டுமே வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 28ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படவுள்ள நடைசீட்டுக்கள் வழங்கும் முறை 30ஆம் தேதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. http://mimas.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமாக குத்தகைதாரர்கள் நடைசீட்டு பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 8, 2025
சீர்காழியில் மாணவர்களுக்கான மேடைப் பேச்சு பயிற்சி முகாம்

மாணவ பேச்சாளர்களை உருவாக்கும் நோக்கத்துடன் ஜே.சி.ஐ சீர்காழி கிரீன் சிட்டி சார்பில் மேடைப்பேச்சு பயிற்சி முகாம் நாளை சனிக்கிழமை சீர்காழி தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. சிறந்த பேச்சுத் திறன் கொண்ட பள்ளி மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
News August 8, 2025
கடைமடை பகுதியில் சிறப்பு கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு

கொள்ளிடம் பகுதியில் பிரதான புதுமண்ணியாறு தெற்கு ராஜன் வாய்க்கால் மற்றும் பொறை வாய்க்கால் உள்ளிட்ட வாய்க்கால்களில் கடைமடை பகுதி வரை பாசனத்திற்கு தண்ணீர் சென்று சேர்ந்துள்ளதா என சிறப்பு கண்காணிப்பு பொறியாளர் திருமலை குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் மயிலாடுதுறை கீழ் காவிரி வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் மாரிமுத்து உள்ளிட்ட நீர்வளத்துறை அதிகாரிகள் உடன் பங்கேற்றனர்.
News August 8, 2025
மயிலாடுதுறை: சிலிண்டர் குறித்த புகாரா? இத பண்ணுங்க

மயிலாடுதுறை மக்களே உங்க வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட கூடுதல் பணம் கேட்குறங்களா? இனி கவலை வேண்டாம். ரசீதில் உள்ள விலையை விட அதிகமாக பணம் கேட்டால் 1800-2333555 எண்ணில் அல்லது https://pgportal.gov.in/ என்ற இணையதளத்தில் புகாரளிக்கலாம். இண்டேன், பாரத்கேஸ் மற்றும் ஹெச்பி-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க