News April 19, 2025
அதே ஸ்கிரிப்ட்.. RCB-யின் 18-ம் எண் சாபம்!

நேற்று PBKS அணிக்கு எதிராக, RCB-யின் தோல்வி ஒரு dejavu- ஃபீலிங்கை கொடுக்கிறது. ஏப்ரல் 18, 2008-ல் KKR அணிக்கு எதிரான மேட்ச்சில் வெறும் 82 ரன்னில் சுருண்டது RCB. அன்று கோலி 1 ரன்னில் அவுட்டாகினார். 18 வருடங்கள் கழித்து, அதே ஏப்ரல் 18-ல் நேற்றும் 95 ரன்னிலேயே RCB சுருண்டது. நேற்றும் கோலி 1 ரன் மட்டுமே அடித்தார். அதே ஸ்கிரிப்ட் வருது. கோலி ஜெர்சி நம்பர் சொல்லி தெரியவேண்டியதில்லை.
Similar News
News October 28, 2025
பிஹாரில் கள்ளுக்கு அனுமதி: தேஜஸ்வி

பிஹாரில் மதுவிலக்கு அமலில் உள்ளது. இந்நிலையில், தாங்கள் ஆட்சிக்கு வந்தால், மதுவிலக்கு சட்டத்தில் கள்ளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படும் என RJD தலைவர் தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி அளித்துள்ளார். அதேபோல், SC, ST வன்கொடுமை சட்டம் போன்றே BC-க்கும் தனிச்சட்டம் கொண்டுவரப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார். முன்னதாக, மதுவிலக்கு ரத்து செய்யப்படும் என பிரசாந்த் கிஷோர் வாக்குறுதி அளித்திருந்தார்.
News October 28, 2025
‘The Family Man’ 3-வது சீசன் ரிலீஸ் அறிவிப்பு

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘The Family Man’ வெப்சீரிஸின் 3-வது சீசன் வரும் நவம்பர் 21-ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் சீசன் பாகிஸ்தான் தீவிரவாதிகளையும், 2-ம் சீசன் விடுதலை புலிகளையும் அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. தற்போதைய 3-ம் சீசன், சீன ஆச்சுறுத்தல்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
News October 28, 2025
சற்றுமுன்: விடுமுறை… 3 நாள்களுக்கு சிறப்பு அறிவிப்பு

வார விடுமுறையையொட்டி 3 நாள்களுக்கு சுமார் 1,000 ஸ்பெஷல் பஸ்கள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, கிளாம்பாக்கத்தில் இருந்து அக்.31, நவ.1-ல் 690 பஸ்களும் இயக்கப்படும் என்றும் கோயம்பேடு, மாதவரத்தில் இருந்து 150 பஸ்களும் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நவ.2 அன்று பணியிடங்களுக்கு திரும்புவதற்கு ஏதுவாகவும் கூடுதல் பஸ்கள் இயக்கப்படவுள்ளன. SHARE IT.


